உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198


நிழல் வடிவங்களை அவள் பார்த்தாள்; அந்தக் கட்டி டத் தொகுதி ஒன்றில் தான் அசாய் சிறை வைக்கப் பட்டிருந்தான் என்பதை அவள் அறிந்தாள். வழிப்போக்கர்களைச் சந்தித்தபோது, தலையைக் குனிந்துகொண்டு அவள் நடந்து சென்ருள். திடீரென்று ஒரு போலீஸ் காவலன் இருட்டி னின்றும் வந்து, அவள் எங்கே போய்க்கொண்டிருக் கிருளென்று அவளிடம் விசாரித்தான். “மாவட்டச் சிறைச்சாலைக்குச் செல்கிறேன். என் பையன் கைது செய்யப்பட்டிருக்கிருன்.” காவலன் அவளைச் சோதிப்பது போன்று பார்த் தான். * லெய்வாவின் பெண்மைக் குரல் இனிமையுடன் ஒலித்தது; மிகவும் பரிசுத்தமான தோற்றத்துடன் விளங்கிளுள் அவள். 'நீங்கள் அவனை இன்றிரவு பார்க்க முடியாது.” 'அவன் விசாரிக்கப்படுவான் அல்லவா?” "அது பற்றி நிச்சயமாகத் தெரியாது எனக்கு." “என் பையன் நிரபராதி. விசாரணை நடந்தே தீரவேண்டும்,' - - தெரு வெளிச்சத்தின் கீழே இளமை தளராத அந்த அழகிய பெண்ணுடன் சற்றுவாயாட வேண்டு மென்று தீர்மானித்து நிதானமாகச் சிரித்தான் காவலன். 'நீங்கள் எங்கே போயிருந்தீர்கள், அம்மா? இன்று நடந்த ரகளையைப் பாருங்கள். கட்சி அலு வலகம் தீக்கிரையானது. பொதுவுடைமைப் புனர் திர்மாணக் கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டது. கடைகள் பல தீவைக்கப்பட்டன. ஏதாவது சிறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/198&oldid=1274932" இலிருந்து மீள்விக்கப்பட்டது