உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


செயற்குழுவின் ஆணைகளை அப்படி அப்படியே நிறை வேற்றும் கண்டிப்பான நடவடிக்கைக்கும் ஊடே "இடதுசாரிக் கொள்கை'யையே தேர்ந்தெடுத்துக் கொள்வான். வலதுசாரிக் கொள்கைகள் உழவர் களின் சார்பில் சுமுகமாக இருப்பதாகவும் முன்பு அவனே அறிவித்திருந்தான். இப்போது அவற்றில் பல நீக்கப்பட்டுவிட்டன. தொழில் முகாம் மூல மாகச் சீர்திருத்தம் செய்யப்படுவதற்கு அவை அனுப்பப்பட்டன. - அது நிரந்தரமானதொரு சிக்கலாக இருந்தது. பச்சாத்தாபமின்றி அதிகாரத்தின் உச்சத்தை அடைந்து, கட்சிச் சார்புடைய மிக முக்கியமான மையக் குழுவில் ஒரு நபராக ஆகவேண்டும். இல்லை, கெளரவம் இழந்து லான் க்வேயி மாதிரி எங்கேனும் தொழில் முகாமுக்கு அனுப்பப்பட்டு விடவேண்டும். கட்சி;யின் உயிர்ப்பான ஒழுங்குமுறை அவன் ஆன் மாவில் உறைந்திருந்தது. அந்தச் சிறு நகராட்சிப் பிரிவின் அமைப்பின் நிருவாகத்தைப் பார்வையிட கான்டன் செயற்குழு இப்போது தோழர் ஸெங்கை அனுப்பி வைத்தது. போக்லோ அரிசிக் கலகத்தினைப்பற்றிய அறிக் கையை டெங்பிங் உன்னிப்பாகப் பார்த்து மிகவும் நுட்பமாக ஆராய்ந்தான். தெளிவான-சுருக்கமான அறிக்கையை அவன் ஸெங்கிடம் சமர்ப்பிக்க முடி யும். ஆங்கிலேயரின் வருகை சம்பந்தமான சகல உண்மைகளையும் அவன் அறியலானன். நாற்காலியை விட்டு அவன் எழுந்தான்; மேல் சட்டையைச் சீர்செய்து கொண்டான், கையில் 2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/21&oldid=1274807" இலிருந்து மீள்விக்கப்பட்டது