உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243


பல பாதைகள் வழிகாட்டின; பூமியிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் சிவப்புச் செங்கற்களால் கட்டப் பட்ட கிராம தேவதைக்குரிய சிறிய கோயிலொன்று சாலைகள் சந்திக்குமிடத்தில் இருந்தது. ஜேம்ஸ் அண்ணுந்து மரங்களின் உச்சிகளை நோக்கினன்; அவை ஒரு நூற்ருண்டைக் கடந்த மரங்கள். இருட்டிக்கொண்டு வந்தது. இருண்டிருந்த பகுதிக்கு அருகில், ஒரு சிறிய குட்டையைக் கண்டனர். அபரிமிதமாக வளர்ந்திருந்த முட்செடிகளும் கோரை களும் அதை மூடியிருந்தன. ஃபான் இன்னமும் வந்துசேரவில்லை. அவர்கள் கால்மணிநேரம் காத்திருந்தனர். அப்போது நகரம் இருக்கும் திசையிலிருந்து இரண்டு கரிய மனித உருவங்கள் தங்களைநோக்கிவந்துகொண்டிருப்பதைப் பார்த்தனர். அது ஃபான் என்று அவர்களால் ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள முடியவில்லை. "ஆமாம், அது நிச்சயம் ஃபான்தான்! என்று முணுமுணுத்தான் டுவான். "ஆனால், கூட ஒரு பெண்ணும் இருக்கிருளே? யார் அது?” என்ருன் ஜேம்ஸ். 'அவளைத்தான் அவன் தன்னோடு அழைத்துச் செல்லப் போகிருன்.” ஃபான் சமீபத்தில் வந்ததும், மரங்களுக்குப் பின்னல் தாங்கள் ஒளிந்து நின்ற பகுதியைக் கவன மாக ஆராய்ந்தவண்ணம் தலையை உயர்த்திப் பார்த் தான் ஜேம்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/243&oldid=1274964" இலிருந்து மீள்விக்கப்பட்டது