உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275


'நீங்கள் இம்மாதிரியாக இராப் பொழுதைக் கழிப்பது உகந்ததல்ல; படுப்பதற்கு ஒர் இடத்தை உங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்" என்ருள் ஈஸ்-. அவள் மூட்டையிலிருந்து ப்ளாஸ்டிக் பைகளை எடுத்து அவைகளைத் தரையில் கவனமாகப் பரப் பிளுள் தலைப்பில் தன் கோட்டை விரித்தாள்; தலையணையாகப் பயன்படும்படி அம் முட்டையை ஒரே அளவில் தட்டிவிட்டாள். மூப்படைந்த தந் தையை அந்த இடத்துக்கு வழி நடத்திச் சென்று அவரை வசதியாகப் படுக்கச் செய்தாள். 'நீ என்ன செய்வாய்? உன் கோட் உனக்குத் தேவைப்படுமே!’ 'பரவாயில்லை; அப்பா, ஜேம்ஸின் கோட்டைப் பகிர்ந்துகொள்ள முடியும்.” r இருட்டைக் கண்டு பயந்து போயிருந்தான் சிறுவன் ஸ்ப்ரெளட். அவன் தன் அத்தையோடு ஒட்டிக் கொண்டான்; அவனுக்கு அழுகை வந்தது; ஈஸா அவனருகே அமர்ந்து "சின்னதம்பி பயப் படாமல் துரங்குடா! நாம் சுதந்தர நகரத்துக்குப் போய்க் கொண்டிருக்கிருேம்!” என்ருள். ஹாங் காங்கைக் குறிப்பதற்கு அகதிகள் இப்போது உப யோகிக்கும் சொல்லான “ஸேயுசெங் என்னும் பதத்தைப் பிரயோகித்தாள் அவள். (ஸேயுசெங் என்பது பொருள் குவிந்த இடத்தைக் குறிக்கும்) "சுதந்திர நகரிலே, தெருக்கள் நியான் விளக்குகள் நிறைந்து பிரகாசமாக இருக்கின்றன; ஒரு பெரிய மலை மேகங்களில் ஒளிந்திருக்கிறது; பெரிய கப்பல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/275&oldid=1274984" இலிருந்து மீள்விக்கப்பட்டது