உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296


ஃபான் அவனே நெருங்கி வந்து, 'அது சரி, டெங்பிங் லெய்வாவைத் தேடி வந்துகொண்டிருக்க வில்லையே?’ என்று கேட்டான். "அவரும் நம்மைப்போல் தப்பி ஓடிக்கொண் டிருக்கிரு.ர்.” "அவர் அப்படிச் சொன்னரா என்ன?” 'இல்லை!” சுருக்கமாகக் கூறி நிறுத்திக்கொண் டான் பையன். 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று ஃபானிடம் கேட்டாள் லெய்வா. “எனக்குத் தெரியாது. யாரோ ஒருவன் பழியை தலைமீது போட்டுக்கொண்டு பலியாக வேண்டும். கலவரத்துக்கும் தீ வைத்தலுக்கும் ஆன குற்றச்சாட்டை யாராவது ஒருவன் ஏற்க வேண்டி யிருக்கிறது. டெங்பிங் எப்போதுமே அதிகார தோரணையுள்ளவராகஇருந்து வந்திருக்கிரு.ர். ஏராள மான ஜனங்களை அவர் அவமதித்திருக்கிருர், காவல் படையுடனும் ராணுவத்துடனும் அவர் அனுசரித் துப் போனதில்லை. கட்சி, வழக்கை விசாரணை செய்யும்போது, அவருக்கும் போலீஸ் கமிஷனருக்கும் இடையில் குற்றச் சாட்டுகளும் எதிர்க் குற்றச் சாட்டுகளும் உண்டாகப் போகின்றன. அவர் மன உறுதியை இழந்துவிட்டார். தன் நிலைக்காக அவர் போராட வேண்டுமென விரும்பியிருந்தால் அவர் நேராகக் கான்டனுக்குச் சென்றிருப்பார்! ஆபத்து மிகுந்த கட்டத்தில் அவர் தன் உத்தியோகத்தை கைவிட்ட காரியம் மெய்யாகவே அவர் நிலையை இரு மடங்கு மோசமாக்கிவிட்டது," என்று சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/296&oldid=1274998" இலிருந்து மீள்விக்கப்பட்டது