பக்கம்:இலட்சிய பூமி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 2 டெங்பிங் ரேடியோவில் ஒலிபரப்பிக் கொண் டிருந்தான், அப்போது, மதப் பிரசார சபை இல்லத்தைச் சேர்ந்த பழைய பள்ளிக்கூடத்துச் சுற்று மதிலில் இருந்த ஒலிபெருக்கியினின்றும் எழுந்த கட்டளை களுக்கேற்ப, வாலிபர் கூட்டுறவு சங்கப் பையன் களின் கூட்டமொன்று பயிற்சி செய்துகொண் டிருந்தது. இக்காட்சியை ஜேம்ஸ் தாயெர் கவனித்துக் கொண்டிருந்தான். காலை ஆகாரம் முடிந்துவிட்டது. காட்சியில் ஒன்றியிருந்தான். அவன் திறந்த வெள்ளை நிற மேல்சட்டையும் தளர்த்தியான பழுப்புநிறக் கால்சட்டையும் அணிந்திருந்தான். பழுப்பு நிற முள்ள தடித்த காலணிகள் போட்டுக்கொண்டிருந் தான். கால் பெருவிரல்களை அழுத்தி முன்னும் பின்னும் ஆடி அசைந்த வண்ணம், காப்பியின் நறு மணத்தை அனுபவித்தவகை காப்பிக் கோப்பையும் கையுமாகக் காணப்பட்டான். மேஜையடியில் உட் கார்ந்திருந்த தன் அத்தை ஆங்கெலிகாவை அவ்வப் போது கண்ணுேட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/31&oldid=752888" இலிருந்து மீள்விக்கப்பட்டது