உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344


தடி முன்னே ஸ்வாட்டுடன் அசாய் நின்று கொண் டிருந்தான்; கூழாங்கற்களைக் காலால் உதைத்து சாலைப்பக்கம் வீசியெறிந்து கொண்டிருந்தான். ஸ்ைஸாமின் கண்கள் ஒருகணம் உற்று நோக்கின. "அங்கேயே நில்லுங்கள். தடத்துக்கு வந்து சேருங்கள். வாருங்கள்! வாருங்கள்!” வழிகாட்டியின் குரல் கரகரத்தது. கைகளை மேலே தூக்கிக்கொண்டு அவன் வேகமாக முன்ளுேக் கிப் பாய்ந்தான். தன் அழைப்பைச் செவிமடுத்து அசாய் விரைவாகப் பின்னல் நடந்து வருவதை அவன் பார்த்ததும் தன் கைகளைத் தாழ்த்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். 'தடத்தில் வந்து நில்லுங்கள்!” என்று அவன் திரும்பவும் கத்தினன். ஆபத்து என்னவென்பதைப் புரிந்துகொள்ள முயல்பவனைப் போன்று தன் கைகளை ஆட்டினன் அசாய்; புன்சிரிப்போடு அவனும் திரும்பக் குரல் கொடுத்தான். “என்ன விஷயம்?” 'பாதையிலே நில்; சொல்கிறேன். பாதையிலே நில்!” அவர்கள் வருவதற்காகக் காத்திருந்த ஸ்வாட் கல்லாய்ச் சமைந்து நின்ருள். அவள் நின்ற இடத்தை அவர்கள் அடைந்ததும், தாங்கள் வந்த தடத்தினின்றும் சற்றே விலகிச் சென்ற இருண்ட பாறை ஒன்றைச் சுட்டிக்காட்டி “நல்ல காலம்! அந்த வழியில் போகாமல் இருந்தீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/344&oldid=1275026" இலிருந்து மீள்விக்கப்பட்டது