உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 L தோலில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புக்களைத் தவிர வேறு ஆபத்துக்களின்றி ஸ்வாட் தப்பித்தது ஓர் அதிசயம்தான்! அவளது கன்னத்து எலும்பில் பட்டிருந்த காயத்தைத் தவிர, அவளது புறங் கைகளிலும் விரல் மூட்டுக்களிலும் சில இடங்களில் சிராய்க்கப்பட்டிருந்தன. ஸ்வாட்டை நிற்க வைப்பதற்கு இரண்டு காவலர்களும் உதவினர். 'அருகில் சுத்தமான குட்டையொன்று இருக் கிறது. அங்கே நீங்களெல்லோரும் கைகால்களைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.” வளைவைச் சுற்றி, சில சிறிய நீர்வீழ்ச்சிகளோடு கூடிய வேகம் நிறைந்த மலை அருவி ஒன்றிருந்தது. இது யென்டீன்டங் அல்லது உப்பளங்கள் என்று காவலர்கள் அவர்களிடம் தெரிவித்தார்கள், அவர் கள் முன்கூட்டியே சமதரைக்கு வந்துவிட்டனர். அந்த இடம் அவர்கள் மனதைக் கவர்ந்தது. டுவான் ஒரு பாறையில் ஒய்வெடுத்துக்கொண் டிருந்தான். ஈஸ் அவனிடம் தன்னுடைய கோட் டை'க் கொடுத்தாள். மடிப்பு வைத்துத் தைக்கப் பட்டிருந்த அவனது மென்மையான மேலங்கியைக் கழற்றித் தரும்படி அவள் கேட்டான்; அதைப் பிழிந்து போட்டால், அது காய்ந்துவிடும். வெய்யில் இல்லை; நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தீ மூட்டலாமாவென்று வழிகாட்டியிடம் கேட்டாள் ஈஸ்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/401&oldid=752990" இலிருந்து மீள்விக்கப்பட்டது