உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 கொண்டு என் கண்களை மூடிக் கொண்டு விட்டேன். நான் மேலும் மேலும் உருண்டு கொண்டிருந்ததை மாத்திரமே என்னல் அறிய முடிந்தது: இதுவே என்னுடைய வாழ்வின் முடிவாக இருக்குமென்றும் எண்ணிவிட்டேன். என் விழிகளைத் திறக்கவே நான் துணியவில்லை. இருளையும் ஒளியையும் மாறி மாறி உணர்ந்தேன். அப்பால், எதுவுமே எனக்குத் தெரியாது........ ۰۰ې 'நல்லது; உன்னையும் உன் புருஷனையும் நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன்........!" என்ருன் டுவான். “புத்தர்பிரான் புகழப்படட்டும்......... நான் எது வும் செய்துவிடவில்லை. நல்ல குடும்பத்துப் பெண் மணியின் கணவர் என் உயிரை ஒருமுறை காப்பாற் றினர்; நல்ல குடும்பத்துப் பெண்மணிக்கு அதற்கு ஈடு செய்ய, நான் மிகவும் கடமைப்பட்டிருக் அவளது தலைமயிர் கலைந்து கிடந்தது. அவளது துணிமணிகள் நனைந்து ஈரமாகவும் சேறு அப்பிக் கொண்டு மஞ்சளாகவும் இருந்தது. அவளது முகத்தி லிருந்த வெட்டுக் காயத்தில் அப்போதும் சேறு படிந்து ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. இத் தகைய பரிதாபகரமான தோற்றத்துடன் ஸ்வாட் விளங்கினுள். ஆனால், அவள் விபத்தைப் பற்றிச் சொன்னபோது, அவள் விழிகளில் ஒப்பற்ற அழகான பேரொளி ஒன்றை டுவான் கண்டான். 'இதோ பாருங்கள். நீங்கள் இவ்விடத்தைச் சுற்றித் தங்கியிருங்கள். குன்றின் இந்தப் பகுதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/403&oldid=752992" இலிருந்து மீள்விக்கப்பட்டது