உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451


யிருந்த சூன்யத்தினின்றும் தலை நீட்டியது. நாம் எதற்காகக் காத்திருக்கிருேம் என்பதை அறியாமல் காத்திருப்பது சங்கடமானது, பயங்கரமானதும்கூட. ரத்த வெள்ளம் ஒடும் போராட்டமா, அல்லது பயங் கரம் நிறைந்த எல்லை தாண்டும் பயணம்ா? இல்லை, படையினரெல்லாம் மருந்தின்மயக்கத்தில் திளைத்துத் தூக்கத்தில் ஆழ்ந்தோ, அல்லது. வேறு எங்கோ அசந்து இருக்கும் நேரத்தில் ஒரு அதிர்ஷ்டவசமாக இலகுவான நழுவலா? என்ன நேரப்போகிற தென்பது யாருக்குத் தெரியும்? சுமார் ஒரு மணி நேரம் கழித்து கடுமையான கடற் காற்று வீசியது. அக்காற்று, அங்கிருந்த இயற்கை மணங்களைத் தவிர மற்ற நாற்றங்களை எல்லாம் அடித்துக் கொண்டு சென்றது. காற்று கீழ்ப்பகுதியின்நாற்புறமிருந்தும் ஹோவென்றுவீசிய தால், அது எந்தத் திக்கிலிருந்து வீசியதென்று கண்டு கொள்ள முடியவில்லை. மூடுபனி பெயர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வானம் ஒளி வாங்கியது. பனிக்கு அடியிலிருந்த இருள் படிவங்களைக் - காண முடிந்தது. கீழ்ப்பகுதியிலிருந்த மேடுபள்ளங்கள் தெளிவாகத் தோன்ற ஆரம்பித்தன. - மேற்கே, மற்ருெரு சிகரம் வெண்ணிறக்கடலின் மேல் அமைதியாக எழும்பும் அரக்கன்போல் மங்க லாக எழும்பியது. ஸ்ைஸாமும் மாவோவும் மேற்கிலிருந்து வரும் மற்றக் கூட்டங்களைக் காணச் சென்றிருந்தனர். ஜேம்ஸ் மிகவும் பசியோடிருந்தான். எல்லோரும் புல்தரையில் உட்கார்ந்திருந்தனர். அவன், தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/451&oldid=1275093" இலிருந்து மீள்விக்கப்பட்டது