உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453


ஜேம்ஸ் மேல்சட்டையும் தலையில் தொப்பியும் அணிந்திருந்ததால் குளிரில் அவனுக்கு அது பாது காப்பாக இருந்தது.அவன் டுவானையும் ஈஸாவையும் எழுந்து மழைச்சட்டையைப் போட்டுக்கொள்ளு மாறு செய்தான். ஈஸ் தன்னுடைய தலைமுடி வெளியே வந்து ஈரம் படாமல் இருக்க போர்வையை இழுத்துத் தலைக்குமேல் போர்த்திக்கொண்டாள். மழைசற்று வலுத்தது. டிங்கும், மாவும், அவர் களைச் சேர்ந்த மற்றவனும் இதை எதிர்பார்க்க வில்லை. லெய்வா ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துத் தன் தலைமயிர் நனையாமல் மூடிக்கொண்டாள். அங்கே தங்க இடம் வேறு கிடையாது. மழை வலுத் தால் அவர்கள் கீழே இறங்கிச்சென்று எங்காவது தங்கவேண்டும். - "இங்கே வா. உன்னல் எழுந்திருக்க முடிய வில்லையா? அவ்வளவு களைப்பாகவா இருக்கிறது?” என்று ஈஸ்-வைக் கேட்டான் ஜேம்ஸ். ஈஸ் தலையைத் துரக்கி வருத்தத்துடன் அவனை நோக்கினுள். х "நீ நடமாடிக்கொண்டிரு, அப்போது குளிர் தெரியாது” என்ருன் ஜேம்ஸ். . . அவளுடைய கம்பளிச்சட்டை சில இடங்களில் நனைந்திருந்தாலும் அப்போதும் நல்ல நிலையில்தான் இருந்தது. ஜேம்ஸ் அதிலிருந்த நீர்த் துளிகளை நீவி. விட்டு, அவளுடைய தோளைச் சுற்றித் தன் கைகளை போட்டுக்கொண்டான். . . 'எல்லாம் சரியாகிவிடும். வானம் நேற்றுமாதிரி அவ்வளவு மப்பும் மந்தாரமுமாக இல்லை" என்று 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/453&oldid=1275095" இலிருந்து மீள்விக்கப்பட்டது