உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479


'நதியிலிருந்து நிலையம் எவ்வளவு தூரம் இருக் கிறது?" என்று டென்னையும் காவோவையும் ஹகுவாங் கேட்டான். "நூறு கஜ தூரம் இருக்கும்.” "அங்கு எத்தனை காவலாளிகளை நீங்கள் பார்த் தீர்கள்?" * "ஒரு டஜன் என்று நினைக்கிறேன். பதினறு பேர்கள் என்று வைத்துக்கொண்டால் நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கலாம். அவர்கள் நாலு திசையிலும் பரவி இருக்கலாம்." 'சாலைகள் எவ்வாறு உள்ளன?” 'கடற்பகுதிகளில் பெரும்பாலும் மணல் நிரம் பியும் கப்பிக்கல் மிகுந்தும் இருக்கின்றன. உள்ளே புகுந்தால் வெறும் பாறைகளும் கற்களும் மிகுந்து காணப்படுகின்றன. - ஹலிவாங் தன் உதடுகளை நாக்கினல் தடவிக் கொண்டு, 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று சூவிடம் வினவினன். - "பதுங்கித் தாக்குவதற்கு ஏற்ற இடம் ஏதாகி லும் அங்கே இருக்கின்றதா?” என்று ஒற்றர்களை விசாரித்தான். சூ. - "நிலையத்திலிருந்து சுமார் நானூறு அடி தூரத் தில் நீர்க்கால்களிடையே சாலை புகும் இடத்தில் இரு கரைகளும் புதர் மண்டிக் கிடக்கின்றன. “அது சரியல்ல, போதாது!" என்ருன் ஃபான். வரைப்படத்தை காட்டும்படி ஜேம்ஸ் கேட் டான்; ஒரு நோட்டுப் புத்தகத்தின் பின்னல் குறித் திருந்த ஒரு படத்தை சூ அவனிடம் நீட்டினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/479&oldid=1275115" இலிருந்து மீள்விக்கப்பட்டது