பக்கம்:இலட்சிய பூமி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


சிற்றுண்டியின்போது, ஜேம்ஸ் இருப்புக்கொள் ளாமல் தவித்தான். காரணம், ஈஸ்விடமிருந்து இன்னமும் ஒரு தகவலும் வராததுதான். "அந்த மனிதனைத் தேடிப் பிடித்துப் பேசுவதாக உறுதி சொன்னனல்லவா?’ என்று கேட்டான் அவன் அத்தையிடம். "ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்ப இயலாதென் றும், இடைவேளைச் சாப்பாட்டின்போது தன் தந்தை மூலமாக ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தாள். செய்தியின் விவரத்தை அவளது சகோதரர் மகன் ஆஸ்பத்திரிக்கு வந்து சொல்லுவான்; உடனே அவள் நமக்கு அறிவிப்பாள்........ அந்த ஆள் ஃபான் ஹெக் டினைக் குறித்து உனக்கு ஏதாவது விவரம் தெரியுமா? அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்தான?” என்று ஸிஸ்டர் ஆங்கெலிகா வினவினுள். 'ஹாங்காங்கில் அவன் உதவியால் தப்பிச் சென்ற ஒரு அகதியிடமிருந்து அவன் பெயரைத் தெரிந்துகொண்டேன். அநேகம் பேர்களுக்கு அந்த வழிகாட்டி இம்மாதிரி ஒத்தாசை செய்திருந்தான். அதிசயமான ஒரு புதிரான விஷயம் என்னவென்ருல் அவனுடைய உ த் தி யோ. க ரிதியான முகவரி கம்யூனிஸ்ட் பத்திரிகை அலுவலகத்தினுடையதா யிருக்கிறது. அவனுக்குச் செல்வாக்குள்ள தோழர் கள் பலர் கட்சியில் இருப்பதாகத் தோன்றுகிறது." "பணத்திற்காக அவன் அதைச் செய்கிருளு? "அப்படித்தான் இருக்கவேண்டும். சமீப காலத் தில் கள்ளமார்க்கெட் ஏராளமாகிவிட்டது; ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/70&oldid=1274841" இலிருந்து மீள்விக்கப்பட்டது