உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጎ2 "பதின்மூன்ரும் எண் அறை எங்கே உள்ளது?” அவள் புன்னகை பூத்தாள். 'கீழ்த்தளத்தில் அது உள்ளது. வழக்கமாக பூட்டித்தான் கிடக்கும். அது ஒரு தற்காலிக சவக்கிடங்கு. பயந்துவிடாதே! அது காலியாகத்தான் இருக்கும்!” என்ருள். 'நான் அங்கே ஃபானைச் சந்திக்கவேண்டுமென்று எண்ணுகிறீர்களோ?”.... “நிச்சயமாக செய்தி அப்படித்தான் இருக்கு மென்று நம்புகிறேன். பக்கத்திலிருக்கும் வாசல் வழியே நீ உள்ளே போய்விடு; உன்னை யாரும் கவனிக்க முடியாது." சிவப்புச் செங்கற்களாலான ஆஸ்பத்திரிக் கட்டிடம், மிஷன் வீடு கட்டப்பட்ட சமயத்தில்தான் கட்டப்பட்டது. அங்கிருந்து ஒரு கல்லெறி தூரம் தான் இருந்தது ஆஸ்பத்திரி. இடையில் புல் மைதானம், வாழைமரங்கள், மூங்கில் புதர்கள் இருந்தன. சுற்றுமதிலின் இந்தப்பக்கத்திலிருந்து பார்த்தால், ஆஸ்பத்திரியின் விசாலமான மேல்தளத் தாழ்வாரங்களில் ஜனங்கள் நடமாடுவது தெரியும். எந்த நேரத்திலும் ஈஸுவை எதிர்பார்த்தவனுக பக்கத்து வாசற்படியில் ஜேம்ஸ் காத்துக்கொண் டிருந்தான். அவன் இதயம் அடித்துக்கொண்டது. வெண்ணிற உடையில் நர்ஸ் குல்லாய் தரித்திருந்த உருவமொன்று அருகிருந்த நுழைவாயிலில் தோன் றியது. அவளுடைய தலைமுடி கறுத்திருந்தது; அவள் வதனம் வட்டவடிவமாக இருந்தது; அவன் நினை ஆட்டிப் பார்த்ததைவிட, அவள் உருவம் நிறைவு பெற்றிருந்தது. வாசல் வழியே அவன் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/72&oldid=753151" இலிருந்து மீள்விக்கப்பட்டது