உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


அங்கிருப்பதைக் காட்டியது. அவன் உடனே எழுந்து நின்ருன். 'இவர்தான் மிஸ்டர் ஃபான். இவர் என் சிநேகிதர்....மிஸ்டர் டாய்!” என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தினுள் ஈஸ்". ஃபான் கையை நீட்டினன்; ஜேம்ஸ் அதைப் பற்றினன். ஃபானும் ஜேம்ஸும் கைகுலுக்கிக் கொண்டார்கள். “உங்களைச் சந்தித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி யடைகிறேன்” என்று மெதுவாக, காண்டன் மொழி யில் கூறினன் ஃபான். இருவர் கண்களும் சந்தித்தன. பீகிங்கில் சாந்த முடனும் அளவான சிறிய வார்த்தைகளுடனும் பேசிய கல்விமான் ஒருவனை அவன் அறிந்திருந்தான். அத்தகையதோர் அறிவாளியின் முகவிலாசத்தை இப்பொழுது மனத்தளவில் காண ஜேம்ஸ் தயாராக இருந்தான். ஆனாலும், அவன் அதில் ஏமாற்ற மடையவில்லை. ஃபான் பழுப்பு நிறம்கொண்ட மீசை வைத்திருந்தான். எஃகு விளிம்பு கொண்ட மூக்குக்கண்ணுடி அணிந்திருந்தான். ஆனல், மேன் மகனுக்குப் பொருந்தாத அவ்வுடைகள்-தூசு படிந்து மடிப்புக்கள் விழுந்திருந்த கைகளுள்ள மேலங்கியும் கால்சட்டையும்-அவனுடைய அறிவுத் தோற்றம் முழுவதையும் கெடுத்துவிட்டன. இருந்த போதிலும், அவன் சாந்தமானவளுகவும் அடக்கம் நிறைந்தவனுகவும் ஜேம்ஸின் மனத்தில் பதிந்தன. 'உங்கள் இருவரையும் விட்டுச் செல்கிறேன் இன்னும் சில நிமிஷங்களில் திரும்பிவிடுவேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/75&oldid=1274842" இலிருந்து மீள்விக்கப்பட்டது