பக்கம்:இலட்சிய பூமி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


“என்னுல் ஒன்றும் உறுதியிட்டுச் சொல்ல முடியாது. நகரத்தில் பல விஷயங்கள் நடந்துகொண் டிருக்கின்றன. எது எப்படியிருந்தாலும், நாம் தொடர்பு வைத்துக்கொண்டே இருப்போம்!” ஃபான் தெளிவாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் பேசினன். 'நீங்கள் அந்தத் துப்பாக்கியை எனக்காகப் பெற்றுத் தருவதாகச் சொன்னிர்கள் அல்லவா?” “நிச்சயம் முயற்சி செய்கிறேன். உங்களுக்கு அது அவசியம் தேவைப்படும்!” ஜேம்ஸ் அவனுக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னன். - ஃபான் கிளம்பினன். கதவை சப்தமின்றி அடைத்துக்கொண்டு, சிறிது துரம் அவனைப் பின் தொடர்ந்தாள் ஈஸு. ஈஸ்-வுக்காகப் பொறுமையுடன் ஜேம்ஸ் காத் திருந்தான். அவள் திரும்பச் சில நிமிஷங்கள் ஆயின. 'எல்லாம் சுமுகமாக இருக்கிறதல்லவா?” என்று விசாரித்தான் அவன். - ஈஸ் தலையை அசைத்துக்கொண்டாள். 'என் லட்சியம் தவறிவிடலாகாது என்பதை நிச்சயப் படுத்திக்கொள்ளவே கொஞ்ச நேரம் காத்திருந் தேன். ஃபானைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர் ”அவனை நம்பலாமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வியாபார ரீதியான புள்ளி. மேலே யிருந்து கீழே பூமிக்குத் தள்ளப்படுகிற வகை. 'பெலெவி இனம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/87&oldid=1274851" இலிருந்து மீள்விக்கப்பட்டது