பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 131


பழமொழிய மாத்திக்கலாமோ? சீ. அப்படியும் சொல்ல முடியாது. அதோ அங்க பித்துப் பிடிச்சவன் மாதுரி நிற்கானே சந்திரன் அவனை இவனோட சேர்க்க முடியுமா? அக்காளோட கோலத்தப் பாத்துட்டு பாவம் தனியா தவிச்சு நிற்கான். இந்த அண்ணன் என்னைக்குமே இப்படித்தான். ஒருநாள்கட சிரிச்சுப் பேசமாட்டான். ஒரு வேளை வயசு வித்தியாசம் காரணமாய் இருக்கலாம். நான் காருல வராமல் கால் வலிக்க நடந்ததுக்காக இவன் வருத்தப்படல. இவன் கெளரவம் அதனால வலியெடுத் துட்டுன்னு வந்ததும் வராததுமா இப்டி அதட்டுறான். ஆனால் சந்திரன்... கூடப் பிறந்த பிறப்புன்னா. அவன் தான் பிறப்பு!

மணிமேகலைக்கு அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. மெள்ள நடந்து முன்னறைக்கு வந்தாள். அப்பாவை வெறித்துப் பார்த்தாள். அவர் இப்போது சுரணையற்று, உறுப்பெல்லாம், செத்து உயிர்மட்டும் சாகாமல் இருப்பது போல் மல்லாந்து கிடந்தார்.

அவரையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றவள், கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டே தோப்புக்கு வந்தாள். சந்திரன் குறுந்தாடி மீசையுடன் மலங்கலான கண்கள் மருட்சியான பார்வையைக் கொடுக்க ஆகாயத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். "தம்பி, ரயில் விளையாட்டு விளையாடி, இப்போ வாழ்க்கையே விளையாட்டாய் போனதால, நிஜ ரயிலுல வந்து நிஜமில்லாம போயிட்டனே" என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழப் போனவள் தன்னை அடக்கிக்கொண்டே அவன் தோளில் ஆதரவாகக் கை போட்டுக்கொண்டே 'தம்பி'... என்றாள். பிறகு அவன் கையை கெட்டியாகப் பற்றிக்கொண்டாள்.

தம்பி அவளையே பார்த்தான். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது. அந்தக் கலக்கம் அழுகைக்கு அச்சாரம்