பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206★ இல்லம்தோறும் இதயங்கள்



'சமூக சேவகிகள் வந்தார்கள். உருக்குலைந்தோர் நிறைந்த அந்த இல்லத்திற்குள் லிப்ஸ்டிக்ஸ் உதட்டோடு, பெரிய காரோடு வந்தார்கள். குதிரைக் கொண்டைகள். ஹை ஹீல்கள். பேஷன் பிளம்ப் பாலீஷ் செய்த நகங்கள். தொப்புளுக்குக் கீழே போன புடவைகள். சேவையில் ஈகோவை திருப்தி செய்யும் மை படர்ந்த கண்ணினர். பொய் நிறைந்த பேச்சினர்.

அறிமுகம் முடிந்ததும், மிஸ்ஸஸ் ராம்நாத் குழையக் குழையச் சிரித்துவிட்டு பின்னர் அழுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு "இந்த ஆர்பன்ட் டெஸ்டிடுட்ஸ்காக ஆப்பிள் கொண்டு வந்திருக்கோம். நானுறு ரூபாய் டொனேஷனும் கொடுக்கலாமுன்னு வந்திருக்கோம். ஏன் இவங்கள ஸொஸைட்டி பாய்காட் பண்ணுதுன்னு புரியலே” என்றாள்.

அந்த மூதாட்டி அவற்றை வாங்காமலே "வெரி குட்! எங் லேடீஸ், ஒங்க உதவிக்கு ரொம்ப நன்றி.! என்ன சாப்புடுறிங்க?" என்றார்.

"நோ தேங்ஸ் மேடம்."

"நோ நோ! எதாவது சாப்பிடணும்!”

"ஒகே! எதாவது ஜூஸ் இருந்தால்.”

"கொடுக்கிறேன்."

மணிமேகலையை அந்த மாது பார்த்தபோது அவள் அதற்குள்ளேயே உள்ளே போனாள். ஐந்து நிமிடத்தில் நான்கைந்து உருக்குலைந்த-அதே சமயம் சுகப்பட்டபெண்கள் ஆளுக்கொரு தட்டில் பழங்களையும், ஜூஸ் களையும் கொண்டு வந்தார்கள். அந்த 'தொண்டுக் கிழவி விளக்கினாள்.

"இங்க எல்லாருக்கும் இவங்கதான் சமைக்கிறது. இவங்கதான் படைக்கிறது. அப்கோர்ஸ் இன்னும்