பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                                சு. சமுத்திரம் + 23


போல் மணிமேகலை. "குழந்தைகளை... மாம்பழத்த தோலோட சாப்பிட விடாதீங்க. இதுல ஜூஸ் எடுத்துக் கொடுக்கலாம்” என்றபோது கனகம் வாயால் மட்டுமல்ல கண்களாலும் சிரித்தாள்.

எல்லோரும் தூங்கிவிட்டார்கள். துரங்கக்கூடாத சந்திரனும், பாமாவும்கூட தூங்கிவிட்டார்கள். மணிமேகலை நாலைந்து ஆரஞ்சுப் பழங்களை எடுத்து, தோலுரித்து ஜூஸ் எடுத்து வெளியே கட்டிலில் படுத்திருந்த தந்தையிடம் கொண்டுவந்தாள். அவர் அதை வாங்கிக்கொண்டு காலடியில் உட்கார்ந்த மகளின் தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டே "என் ராசாத்தி, நீ வந்ததுல ஏற்பட்ட சந்தோஷத்த அனுபவிக்க முடியாம நீ போகப் போவும்போது ஏற்படப்போற துக்கத்த நினைச்சிப் பார்க்காம இருக்க முடியலம்மா!" என்றபோது இதுவரை தன்னைக் கட்டுப்படுத்தியிருந்த மணிமேகலை இப்போது விம்மினாள்.</p> 

 "அப்பா. அப்பா ! எதுக்குமே கலங்காத நீங்க என்னைப் பார்த்ததும் கண் கலங்கி கண்ணிர் விட்டியளே, எதுக்குப்பா? எதுக்குப்பா? அண்ணி ஒங்களுக்கு வேளா வேளைக்கு மருந்து தராமலும், பிள்ளைங்களை திட்டுறது மாதுரி ஜாடையாயும் திட்டுறதா தம்பி சொன்னான். நிசமாவா அப்பா, நிசமாவா?” 

 அருணாசலம் எதுவும் பேசவில்லை. மகளின் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டார். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பிறகு அந்தக் கைகளை வருடிக்கொண்டே பேசினார். </p> 

"நான் அரக்கன். எனக்கு. இப்போ படுறது பத்தாது. ஒன்னப் பொறுத்த அளவுல பெரிய தப்புப் பண்ணிட்டேன். ஒன் மனசு தெரிஞ்சும், கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டு இப்போ கண்கலங்குகிறேன். நீயாவது ஒரு </p>