பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 37

 பேசாண்டாமா? நல்லது கெட்டது யோசிக்காண்டாமா? நாலையும் பார்க்காண்டாமா?”

“பார்க்கலாம் அண்ணி. குடும்பம் கோத்திரம் பார்க்க வேண்டியதில்ல. எனக்கு, நீங்க எவ்வளவு போட்டீங்களோ, அவ்வளவும் அவங்க போடுவாங்க.”

அண்ணிக்காரியின் வாயில் நெருப்பு வீசியது.

“அவ்வளவு தொலைவுல, எதுக்காக பெண் எடுக்கணும்? ஒன்னைக் கொடுத்துட்டு, எப்பொ பாக்கலாம் எப்பொ பாக்கலாமுன்னு நாங்க படுற பாடு போதாதா?”

“நாம பொண்ணு எடுக்கிறமே தவிர, கொடுக்கலியே? பாமா இங்கதான் வரப்போறாளே தவிர, சந்திரன் அங்கேயா போகப்போறான்?”

அண்ணிக்காரி, புருஷன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். அந்த வேகத்தில் அவர் காது ஆடியதே தவிர வாயாட வில்லை. என்றாலும் புருஷனின் மெளனத்தை தன் கட்சிக்கு சம்மதமாக அனுமானித்துக்கொண்டு, கனகம் பேச்சில் காரத்தைச் சேர்த்தாள்.

“மணிமேகல! இந்த விஷயத்துல நீ தலையிடாத ஒன் தம்பிக்கு, என் தங்கச்சிய கொடுக்கிறதா எங்க அப்பா சொல்லிட்டாரு.”

“ஒங்க அப்பா சொன்னால், நாங்க கேட்கணுமுன்னு நீங்க வற்புறுத்துறது தப்பு அண்ணி.”

கனகம், இப்போது தன் நிஜத்தைக் காட்டினாள்.

“அண்ணன் தம்பி ஒற்றுமையாய் இருந்தால் ஊர்ல பெருமை. நாங்க கடைசி காலம் வரைக்கும் ஒற்றுமையாய், ஒரு பானையில ஆக்கி, ஒரு இலையில சாப்பிடலாமுன்னு