பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ★ இல்லம்தோறும் இதயங்கள்


வந்துட்டா, என்ன பண் ண முடியும் வெள்ளம் வருமுன்னே அணை போடாண்டாமா? ஏய் லட்சுமி ! ரமா, சேகரோட பேசாம வீட்டுக்கு வந்துரு ! நீ வாழ்ந்தது போதும்!"

லட்சுமியே தந்தைக்குப் பதில் கொடுத்தாள்.

"ஒங்க வேலய பாத்துக்கிட்டு போங்கப்பா. அவங்க படிச்ச ஆம்பிளைங்க. அவங்களுக்குத் தெரியாதா? ஒருவருக்கு ஏதோ ஒண்ணு வந்துட்டு என்கிறதுக்காக, அதையே பிடித்துக்கிட்டு இப்படியா குதிக்கது?”

ராமபத்திரன் மகளை முறைத்துப் பார்த்தபோது, லட்சுமியின் கணவன் சங்கர் "அப்படியே பேசினாலும் இப்படியா சத்தம் போட்டுக் கத்தறது? இவரு போடுற கூச்சலுல இந்த அரக்கோணம் முழுசும் கேட்டிருக்கும்" எனறாா.

பேத்தி ரமாகூட, தாத்தா எதையோ சொல்லக் கூடாததை சொல்லிவிட்டார் என்பதுபோல முறைத்துப் பார்த்தாள். நாலு வயதுப் பயல் சேகருக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் ஒன்று புரிந்தது. தாத்தா அங்கே நிற்கக்கூடாது. நிற்கவே கூடாது.

தாத்தாவின் பின்னால் வந்து "போ. போ. போ" என்று சொல்லிக்கொண்டே அவன் அவரைத் தள்ளினான். எல்லோருக்கும், லேசாக சிரிப்புக்கூட வந்தது. ராமபத்திரன் இன்னும் கோபப்பட்டார்.

"ஒப்புக்காவது அப்படிச் சொல்லாதடான்னு சொல்றியளா? சின்னப் பிள்ளய ஏவி விடுறியளாக்கும்!"

லட்சுமிக்கு அப்பாவின்மீது இரக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மணிமேகலையின் மீதும் சிறிது வெறுப்பு ஏற்பட்டது. சேகரின் கையைப் பிடித்து இழுத்தாள். ராமபத்திரன் பேச்சை விடாமலே "இது சின்னப் பிள்ள செய்யுற காரியமான்னேன்” என்று சொல்லிக் கொண்