பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 85


அதுவரை அவனைக் காத்திருக்கச் செய்யும்படியும், அக்கா கிழவியிடம் சொன்னார். ஆனால் கிழவர் மறுத்துவிட்டார். “ஒன் தம்பி வீட்ல பெண்ணு எடுக்க இன்னும் எனக்குப் பைத்தியமா?” என்றார். ஜெயராஜ், அம்மாவிடம் ஒனக்குப் பைத்தியமா? இல்ல ஒங்க தம்பிக்குப் பைத்தியமா? இல்ல ஒங்க ரெண்டு பேருக்கும் பைத்தியமா? அவள் வயசென்ன... என் வயசென்ன” என்று சொல்லிவிட்டான்.

கிழவி பழையதை கோடி காட்டிப் பேசியதால் பாதிக்கப்பட்டவர்கள் போல், எல்லோருமே சிறிது துணுக்குற்றார்கள். ஜெயராஜ் எதையோ சிந்திப்பவன் போல் மோட்டார் பைக் சாவிக்கொத்தின் வட்டத்தைப் பிடித்து சுற்றிக் கொண்டிருந்தான். பிறகு திடீரென்று மோட்டார் பைக்கை நோக்கிப் புறப்படப் போனான். உடனே வசந்தி “உங்களுக்கென்னய்யா, மோட்டார் பைக் இருக்கு ஒரு நொடில போயிடுவிங்க. நான்தான் எங்க வீட்டுக்கு நடந்து போகணும்” என்றாள்.

சங்கரன் சும்மா இருக்கலாம். இருக்கவில்லை.

“வேணுமுன்னால் பின்னால ஏறிக்கோ. ஒன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான்.”

ஜெயராஜ் ஸ்டார்ட் செய்த பைக்கில் எதையோ துடைப்பவன்போல் ‘பாவலா’ செய்தபோது வசந்தி, லட்சுமியை தர்மசங்கடத்துடன் பார்க்க கிழவி, “அய்யா கூடப் பிறந்த அத்தை மகனோட போக யாருகிட்ட கேக்கணும்? வேணுமுன்னா போ” என்றாள். லட்சுமி “ஆமாம். சீக்கிரமா வீட்டுக்குப் போயிடலாம். அடேயப்பா, எங்க வீடு எவ்வளவு தொலவுல இருக்கு” என்றாள்.

ஜெயராஜின் பைக் இன்னும் நகரவில்லை. வசந்தி தயங்கித் தயங்கியே நடந்தபோது, பாமா “இவங்க சரியான கர்நாடகம்” என்றாள். உடனே வசந்தி தான், மிஸ்.