பக்கம்:இல்லற நெறி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

நல்குகின்றது. பெரும்பான்மையான ஆடவர்-மகளிர் வாழ்க்கையில் திருமணம் உயிர்நாடிபோல் அமைந்து மிக நெருங்கிய உடல், உள, ஆன்மிக ஒருமைப்பாட்டினை ధఃశిr வித்து விடுகின்றது; யான் எனது என்ற தன்னணு நிலை கள் மறைந்து நாம் நமது என்ற பொதுநல நிலைகள் தோன்றுகின்றன. ஒரு நல்ல திருமண் த்தில்கணவன்-மனைவி யரின் தனிப்பட்ட முனைப்புகள் ஒன்றிக் கலக்கின்றன. ஒரு வருடைய சுக துக்கங்கள் மற்றவரின் சுக துக்கங்களாக அமைகின்றன. அவர்களுடைய மதிப்பீடுகள், விருப்பங்கள் வாழ்க்கை யதுபவங்கள் இவை யாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொள்ளுகின்றனர். இறக்கும் வரையில் இருவரது பற்றுறுதியும் யாதொரு நிபந்தனையுமின்றி இருவரையும் இறுகப் பிணைக்கின்றது: திருமணத் தளை என்பது உண்மை யில் தெய்விகத் தன்மையுடையது; எவரும் அதனைச் சிதைத் தல் முடியாது.

இங்ங்ணம் ஒருயிர் ஈருடல் எனப் பிணிக்கும் திருமணம் ஒருவருடைய தனிமைக்கு மருத்தாக அமைகின்றது; காதல் உணர்ச்சியைத்துாய்மையாக்குவதற்கும் அவ்வுணர்ச்சி சிறப் பாகப் பொலிவதற்கும் வாய்ப்பினைத் தருகின்றது. அத் தகைய மணமக்களுக்குப் பிறக்கும் குழவிகளின் சமூக வாழ்க்கையையும் வளமாவகுகின்றது. நினைப்பிற்கெட் டாத நெடுங்காலமாகவே மனத்தில்ை பிணைக்கப்பெற்ற பெற்ருேர்கள் தம் குழவிகட்குச் சிறந்த ஆசிரியர்களாக அமைந்துகொண்டு வருகின்றனர்; புதிதாகப் பிறந்த மானிடப் பிராணிகளைச் சிறந்த சமூகப் பொறுப்புடைய ஆட்களாகச் செய்வதற்குக் குடும்பம் முக்கிய பள்ளியாக அமைகின்றது. குடும்பம் எவ்வழி அமைகின்றதோ, அவ் வழியே சமூகமும் அமையும்’ என்ற பொன்மொழியும் இதஞல் எழுந்தது,

மேலும், கணவன்-மனைவி ஆகிய இருவருள் ஒருவர் மற்றவர்.பால் கொண்டுள்ள அன்பும் தம் குழந்தைகட்டுக் கல்வி நல்கும் பொறுப்பும் அவர்களுடைய படைப்பாற்றல் களைக் கிளர்ந்தெழச் செய்யவும், அவற்றைச் சிறந்த முறை யில் வளரச் செய்யவும் துணை செய்கின்றன. தம்முடைய கல்வி, சமூக நிலை, சமயம், பொருளாதார நிலை இவை எங்ங்ணமிருப்பினும் ஒவ்வொரு தம்பதிகளும் திருமணத் தின ல் எழக்கூடிய படைப்புத் துரண்டலினல் மிக்க மன நிறைவு கொள்ளுகின்றனர். இம்முறையில் திருமணம் ஒவ் வொரு குடிமகனுக்கும் சிறந்த பயிற்சிப் பள்ளியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/10&oldid=597813" இலிருந்து மீள்விக்கப்பட்டது