பக்கம்:இல்லற நெறி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 翰蒙

அறிவாய். அமிலங்கள் விந்தனுக்களுக்குத் தீங்கு விளைவிப் பவை. இந்த விளைவினைமாற்றுவதற்காகக் கலவித் துடிப்பின் பொழுது சிறுநீர்ப் புறவழியிலுள்ள ஒருசில சுரப்பிகள் காரத் தன்மையுள்ள சுரப்பு நீரை வெளிப்படுத்தும். இது சிறுநீர்ப் புறவழியிலிருக்கக்கூடிய அமிலங்களை நடுநிலையாக்கிவிடும். இதல்ை விந்துப் பாய்மம் வெளிப்படுங்கால் அது யாதொரு திங்கையும் அடைவதில்லை; இந்தச்சுரப்புநீர்குறியின்வாயிலில் பிசுபிசுப்பான தன்மையுடன் காணப்பெறும், கால்வாயின் வழியாக விந்துப் பாய்வதற்கு இத்திரவம் வாடிக்கிடு பொரு ளாக உதவுகின்றது என்று ஒருசிலர் கருதுகின்றனர். சாதாரணமாக இந்தத் திரவத்தில் விந்தனுக்கள் இருப்ப தில்லை. சில சந்தர்ப்பங்களில் புணர்ச்சித் துடிப்பு ஏற்படுங் கால் விந்து பாய்வதற்கு முன்னரே மிகச் சிறிய அளவு விந்து கசிவதுண்டு; இந்த விந்துவில் மிகச் சிலரிடமே விந்தனுக்கள் காணப்பெறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விந்து வெளியேற்றத்தில் இன்னுெரு முக்கிய செய் தியை நீ நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். விந்துவி லுள்ள பல்வேறு சுரப்பு நீர்களும் தொடர்ந்து உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனல், இச் சுரப்பு நீர்கள் ஒன்றுசேர்வது விந்துவெளியேற்றத்தின் பொழுதே நிகழ்கின் றது. இச்சமயத்தில் பிறப்புறுப்புக் குழலின் தசைச் சுருக்கங் கள் எபிடிடைமிசையும் விந்தேறு குழலேயும் நெருக்கிவிந்துப் பைகளின் சுரப்பு நீர்களுடன் விந்தணுக்களை சிறுநீர்ப்புற வழிக்குக் கொண்டுவருகின்றன. அதே சமயத்தில், முன்னைய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல், புராஸ்டேட் சுரப்பியும் தன்னுடைய சுருக்கங்களால் சிறுநீர்க் கால்வாயில் விந்துப் பாய்மம் நுழையும் இடத்திலுள்ள எண்ணற்ற சிறு திறப்பு களின் மூலம் தன்னிடமுள்ள சுரப்பும் நீரையும் வெளித் தள்ளுகின்றது.

58. வழுக்கிடு பொருள்-Lubricant. 59: aohg Gajaf GuðApth--Ejaculation. @一7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/103&oldid=597821" இலிருந்து மீள்விக்கப்பட்டது