பக்கம்:இல்லற நெறி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் J 69

பாலறி முறை இனப்பெருக்கம் : எனினும், முதிரா நில்ைக்குரிய பிராணிகளிடம்கூட சில பாலறிச் செயல்கள் காணப்படத்தான் செய்கின்றன. ஒற்றையணு உயிரிகள் பாலறி வேற்றுமையன்றிப் பல தலைமுறைகளில் தொடர்ந்து பெருக்கமடைந்த பிறகு அவற்றிடம் சோர்வும் முதுமைப் படுதலும் தோன்றுகின்றன. அச்சமயத்தில் சிறிது காலம் இரண்டு அணுக்கள் இணைந்து ஒன்ருகிவிடுகின்றன; சிறிது காலம் இங்ங்ணம் நடைபெற்ற பிறகு மீண்டும் அவை பிரி கின்றன. இவ்வாறு இணைந்து நிகழும் செயலில் இந்த இரண்டு உயிரிகளும் தம்முடைய அணுவறைப் பொருள்களை பரிமாறிக் கொள்ளுகின்றன; இச் செயல் அவற்றிடம் இளமை தரும் விளைவினை உண்டாக்கி மீண்டும் அவற்றிடம் பாலறியா முறையில் பெருக்கத்தைத் தோன்றச் செய்கின் றது. எனவே, எல்லா உயிரிகளிடமும் ஏதாவது ஒரு முறை யில் பாற்செயல் ஒர் அடிப்படை நிகழ்ச்சியாக அமைந்துள் வளது என்று கருதலாம்.

மிக உயர்ந்த முறை வடிவங்களைக் கொண்ட உயிரினங் களில் பிரத்தியேகமாக அமைந்த அவற்றின் ஒரு சில பகுதி களே இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் வகையில் ஒரு முறை தோன்றியுள்ளது. விந்தணுக்கள், முட்டையணுக் கள் என்ற பிரத்தியேகமான உயிரணுக்கள் உண்டாகி அவற்றின் சேர்க்கையால்மட்டிலும் புதியஉயிரிகள் தோன்று கின்றன. மண்புழு, நத்தை போன்ற சில பிராணி களிடம் இவ்விரண்டு வகை உயிரணுக்களும் ஒரே உயிரிடம் தோன்று கின்றன. எனினும், பெரும்பாலான இனங்களிடம்விந்தணுக் களே உண்டாக்கும் ஆண், முட்டையணுக்களை உண்டாக் கும் பெண் என்று இரண்டு தெளிவான பாலறிகுறிகளுடன் கூடிய இனங்கள் உள்ளன; இவ்வகை இனங்களில் பெற்ருேர் கள் சந்தித்து அவர்களுடைய பாலறி அணுக்கள் சேர்வதன

7: @∨5 fil;(upth Gouð–Conjugation 8: 2-uìg goiás or—Germ cells

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/175&oldid=597936" இலிருந்து மீள்விக்கப்பட்டது