பக்கம்:இல்லற நெறி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இல்லற நெறி


வழங்கி வருகின்றது. கி. மு. 715-இல் உரோமாபுரி நகரில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின்படி ஒரு பெண் தன் கருப்ப காலத்தின் இறுதிவாரங்களில் இறக்க நேரிடின் அக்குழந் தையை இம்முறைபடி பிரித்தெடுக்க வேண்டும் பிற்காலத் தில் உரோமானியச் சட்டங்கள் சீஸரின் சட்டங்கள்’ என வழங்கின. இதிலிருந்து சீஸரின் செக்ஷன்' என்ற பெயர் தோன்றியிருக்க வேண்டும் என்பது மற்ருெரு கதை உண்மையில் இந்தப் பெயர் எப்பொழுது யாரால் எதற் காகப் கொடுக்கப்பட்டது, இம்முறை முதன் முதலாக எப் பொழுது எந்த நாட்டில் யாரால் கையாளப்பட்டது என்ற விவரங்கள் இன்னும் தெளிவாக அறியக்கூடவில்லை,

பழங்காலத்தில் செய்யப்பெற்ற இந்தச்சிகிச்சைமுறையில் தாய்க்கும் சேய்க்கும் இறப்பு நிகழ்வதற்குப் பல காரணங் கள் இருந்தன. இன்று இம்முறை மிகவும் முன்னேறி நகர்ப் புற மருத்துவ நிலையங்களில் அன்ருட நிகழ்ச்சியாக வெற்றி யுடன் மேற்கொள்ளப்பெற்று வருகின்றது. குழந்தை இடுப் பெலும்புக் கட்டின் வழியே வெளிவர முடியாது என்று மருத் துவர் தீர்மானித்தாலும், ஆசன உதயத்தில் குழந்தை பெரி தாக இருந்து இடுப்பெலும்பு குறுகலாக இருந்தாலும், முன்னடைப்பு நஞ்சு கருப்பையின் வாயை முழுவதும் மூடி யிருந்தாலும் தாயையும் சேயையும் காப்பாற்றுவான் வேண்டி மருத்துவர்கள் சிஸேரியன் அறுவை செய்கின்ற னர். கருப்பிணிக்கு மயக்கம் கொடுத்த பின்பு மருத்துவர் கொப்பூழின் கீழ் வயிற்றின் மீது இடுப்பெலும்புக் கட்டின் முன்பாகம் வரை ஆறு அங்குலம் கிழித்து, கருப்பையையும் கைபுகும் அளவிற்குக் கிழித்து, பனிக் குடத்தை உடைத்து குழந்தையை எடுத்து விடுகின்ருர். பிறகு முறைப்படித் தையல் போட்டுவிடுகின்ருர். இதனை நடத்துவதற்கு மூன்று மருத்துவர்களின் துணைவேண்டும்; செய்து முடிப்பதற்கு நாற்பது நிமிடங்களுக்குமேல் ஆகும். இம்முறைப்படிப் பிரசவம் ஆன பெண் பதினைந்து நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டும்: இன்று குறுகிய இடுப்பெலும்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/228&oldid=1285189" இலிருந்து மீள்விக்கப்பட்டது