பக்கம்:இல்லற நெறி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

இல்லற நெறி


உறையை இணைவிழைச்சுக்கு முன்னர் அணிந்து கொள்ள வேண்டும். இணைவிழைச்சின்பொழுது வெளிப்படும் விந்து பெண்ணின் கருப்பையினுள் செல்லாமல் இந்த உறையி னுள்ளே தங்கிவிடும் இதனுல் கருப்பம் உறல் தடை செய்யப் பெறுவதுடன், நோய் தொற்றுதலும் தவிர்க்கப் பெறு கின்றது.

நடைமுறையில் இரண்டு விதமான உறைகள் உபயோகத்திலிருந்து வருகின்றன; முதல் வகை மீன்தோல் உறை என்பது; இது பிரத்தியேகமான பிராணி இழையத் தாலானது. மற்ருெரு வகை இரப்பர் உறையாகும். இஃது இயற்கை இரப்பராலோ அன்றி செயற்கை இரப்பராலோ செய்யப்பெற்றது. முதல் வகையைப் பயன்படுத்துவதற்கு முன்னர் நனைத்துப் பதப்படுத்த வேண்டும்; இது நடை முறையில் எளிதானதன்று; விரும்பத் தக்கதுமன்று. தவிர வும் இதன் விலையும் அதிகம்; இரப்பர் வகையைவிட இது எவ்வாற்ருனும் பிரத்தியேகமான நன்மை தருவதும் அன்று. இரப்பர் உறையிலும் இரண்டு வகை உண்டு. ஒரு வகை மெல்லியதாகவும், விரிந்து சுருங்கக் கூடியதாகவும் விளிம் பில் வளையக் கூறியதாகவும் இருக்கும். இன்னென்று, சற்றுத் தடித்து இருக்கும். இதனைத் தடித்தஉறை" என்று வழங்குவர். மெல்லிய உறை சற்று விலை மலிவு; ஆனல் தடித்த உறையைப்போல் இதனை அடிக்கடிப் பயன்படுத்த முடியாது. தடித்த உறையின் விலையும் சற்று அதிகம்; அஃது எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைப்பதுமில்லை; பொது வாக இரப்பர் உறைகளின் விலை மீன்தோல் உறைகளைவிட மிகவும் குறைவாக இருப்பதால் இவை எங்கனும் பெருவழக் காக உள்ளன. இம்முறையில் தோல்வியுறக் கூடிய கில குறை பாடுகள் இருப்பினும், அக்குறைபாடுகள் எளிதில் தவிர்க் கக் கூடியனவாதலாலும், இம்முறையை ஒரு மருத்துவர் உதவியின்றி எவரும் எளிதில் கற்றுக்கொள்ளக் கூடியதாகை

48. “15&G 5srā’ also sp-Fishskin sheath 49. §19-335 p-of-Thick Sheath

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/278&oldid=1285213" இலிருந்து மீள்விக்கப்பட்டது