பக்கம்:இல்லற நெறி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

இல்லற நெறி


கூறுகள் முட்டைப் பக்குவமடைதலைப் பாதிக்கலாம்; அவை கருக்குழல்களிலோ அல்லது பிறப்புறுப்புப் பாதைகளிலோ வலிப்புகனே விளைவிக்கலாம்; அல்லது கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பதித்துக்கொள்வதிலும் அவற்றின் தலையீடு இருக்கலாம். சிலருக்குத் தத்துப் பிள்ளை எடுத்த பிறகு குழந்தைப்பேறு ஏற்பட்டு விடுகின்றது! ஒரு தம்பதி கட்கு இருபதாண்டுகளாகக் குழந்தையில்லாதிருந்து ஒரு பெண் குழவி பிறந்தது. அதன் பிறகு அவர்கட்குக் குழந் தைப்பேறே ஏற்படவில்லை. அவர்கள் பெரிய செல்வந்தர் கள். தங்கட்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று அவர்கள் ஒரே கவலையில் மூழ்கி இருந்தனர். செல்வத்தின் மீதுள்ள ஆசையால் பலர் அவர்கள் வீட்டுப் பெண்ணை (வயது 18) மணந்துகொள்ள அரும்பாடுபட்டனர். இறுதி யில் செல்வாக்குள்ள ஒருவர் அப் பெண்ணைத் தம் மகனுக்கு மணம் புரிவித்துக் கொண்டார். நல்ல இடத்தில் பெண் லுக்கு மாப்பிள்ளை கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஆண் குழந்தை இல்லையே என்ற அவர்களிடமிருந்த கவலையை மறக்கச் செய்தது. ஒரு சில பாண்டுகளில் இத் தம்பதிகட்கு ஆண் குழந்தை பிறந்தது! இத்தகையவர்களிடம் கருத்தரியா திலே உள்ளக் கிளர்ச்சிக் கோளாறுகளால் ஏற்பட்டிருத்தல் கூடும்; குழந்தை இல்லையே என்ற கவலையே கருத்தரியா நிலேக்கு ஒரு காரணமாகவும் அமையலாம்.

சில பெண்களிடம் மருத்துவர் கருப்பையை மாற்றி வைத்தார் என்பது போன்ற செய்தியை நீ கேட்டிருப்பாய் என்று கருதுகிறேன். பெண்கள் கருத்தரியா நிலையிலிருப் பதற்கு அவர்கள் கருப்பை இருக்கவேண்டிய நிலையை விட்டு இடம் பெயர்ந்திருந்தாலும் மலட்டு நிலைக்கு ஒரு காரணமாகும். சிலரிடம் கருப்பை முன்ளுேக்கித் துருத்திக் கொண்டும், சிலரிடம் பின்னுேக்கித் துருத்திக்கொண்டும் இருக்கும். இன்னும் சிலரிடம் அது மடிந்தும் கிடக்கும்;

46. Guolilo-Spasm بع 4 7. SðRAUFGÞ—1nterference

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/330&oldid=1285238" இலிருந்து மீள்விக்கப்பட்டது