பக்கம்:இல்லற நெறி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு #31

இம்முறையினல் பிறக்கும் குழவிகளுக்குச் சட்டபூர்வ மான உரிமைகள் யாவும் உண்டு என்பதைச் சொல்லவேண் டியதில்லை; இத்துறையில் பல கருத்து வேறுபாடுகள் இருக் கத்தான் செய்கின்றனவாயினும், அவற்றிற்குப் பொருளே இல்லை. ஒரு கணவனும் மனைவியும் விரும்பித் தத்துப் பிள்ளை யாக எடுக்கும் குழந்தைக்கு எல்லா உரிமைகளும் எங்ஙனம் சட்டப்படி வருகின்றனவோ, அங்ங்ணமே இருவரும் விரும் பிச் செயற்கையாக விந்துப் பாய்ச்சும் முறையால் பெற்ற குழந்தைக்கும் எல்லாவிதமான சட்ட உரிமைகளும் வருதல் தானே முறை? இம்முறை “அரைத்தத்து' என்று வழங்கப் பெற்ருலும், முழுத் தத்து விடம் இல்லாத வெற்முேர் களின் ஒருவரது பண்புகள் இக்குழந்தையிடம் மரபுவழியாக இறங்கியிருப்பதால் இதற்குத்தானே எல்லா உரிமைகளும் அதிகமாக வருதல் வேண்டும்? இம்முறை இப்பொழுதுதான் சிறிது சிறிதாக நடைமுறைக்கு வந்துகொண்டிருப்பதால், சட்டபூர்வமான ஆதரவுகள் இக்குழந்தைகட்கு ஏற்படுவ தற்கு யாதொருவிதமான ஏற்பாடுகளும் இன்னும் மேம் கொள்ளப் பெறவில்லை.

கிரந்தரப் பெண் மலடுக்குக் கழுவாய் : ஒரு பெண் நிரந் தரமாகவே மடலாக இருந்தால், இம்முறையினுல் அவளைக் கருவுறச் செய்தல் முடியாது: ஒரு பெண்ணின் முட்டையை எடுப்பதற்கும், அதனை இன்னுெரு பெண்ணிடம் செயற்கை யாகப் பதிப்பதற்கும் இன்னும் யாதொரு முறையும் கண் டறியப்படவில்லை. இவ்விடத்தில் அமெரிக்க நாட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி யொன்றினைக் கூறுவது சாலப் பொருத்த மாகும். முப்பத்தைந்து வயது நிரம்பிய நங்கையொருத்தி ஒரு கல்லூரிப் பேராசிரியரை மணந்து கொண்டாள். பத்தாண்டுகளாக அவளுக்குக் குழந்தைப்பேறு ஏற்பட வில்லை. மருத்துவச் சோதனையால் அவளிடம் நிரந்தரமான மலடு ஏற்பட்டிருக்கும் என்று அதனையும் அவள் மேற்கொண் டாள். அதன் மூலம் அவள் பிறவியிலேயே இயல்பிகழ்ந்த குறைபாடுள்ளவள் என்பதும், கருவுறுதலும் குழவி பெறு வதும் அவளால் சாத்தியப்படக் கூடியவை அல்ல என்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/337&oldid=598283" இலிருந்து மீள்விக்கப்பட்டது