பக்கம்:இல்லற நெறி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

இல்லற நெறி


மும் இருவரிடமும் உண்டாகும் ஒருவித சிக்கலான பொருத் தப்பாடாகும்’ எனவே, போதுமான அளவு இணையும் நடத்தை ஆண்களிடமும் பெண்களிடமும் இயல்பூக்கத்தின் அடிப்படையில் ஏற்படுவதில்லை என்பது பெறப்படுகின்றது. தக்கவாறு திருப்திகரமான பாலுறவு வாழ்க்கை வளர வேண்டுமாயின் பாலுறவுபற்றிய யுக்திமுறையை24 மக்கள் கற்றே ஆகவேண்டும்.

பாலுறவு பற்றிய யுக்தி முறை: பாலுறவுபற்றிய யுக்தி முறையாவது யாது என்பது பற்றியும் விளக்குவேன். திருப் தியான முறையில் திறமையாகக் கலவி புரிவதே பாலுறவு பற்றிய யுக்தி முறையாகும்: இதனைத் தம்பதிகள் வெற்றி யுடன் கொண்டுசெலுத்தவேண்டுமாயின் அவர்கள் முதலா வதாகப் பாலுறவில் பங்குபெறும் உடற்கூற்றில், உடலியல் பற்றிய செயல்களின் பொறிநுட்பத்தை நன்கு புரிந்து கொண்டிருத்தல் வேண்டும்; இரண்டாவதாக, அவர்கள் காதலின்பக் க ைநுட்பத்தை நன்கு அறிந்திருத்தல் வேண் டும்; அஃதாவது, இருவருக்கும் திருப்தியாகவுள்ள முறையில் எங்ங்ணம் பாலுறவு கொள்வது என்பது நன்கு தெரிந்திருதி தல் வேண்டும்.

உடலியல் அடிப்படையில் நோக்கினல், கலவி புரிவதில் ஆண் பிறப்புறுப்புகளும் பெண் பிறப்புறுப்புகளும் ஒன்று சேர்கின்றன என்பது தெரிகின்றது. ஆகவே, பாலுறுப்பு களின் அமைப்பையும் செயலையும்பற்றியும், முறையாக ஒன்று பிறிதொன்றுடன் கொள்ளும் தொடர்புகள்பற்றியும், பால் தூண்டலும் பால் துடிப்பும் ஏற்படுங்கால் நேரிடும் மாற்றங்கள்பற்றியும், உறுப்புகள் திருப்தியான முறையில் தொடர்புற அமைவதற்குத் தம்பதிகள் மேற்கொள்ள வேண் டிய நிலைகள்பற்றியும்? ஆனும் பெண்ணும் ஒரளவாவது

B3. Qurgh BASúLim G-Adjustment 24. ul#Ggp6op–Technique 25. Quiroglo-Lib–Mechanism Es6. f5,3%,0s6ñr-~-Postures

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/366&oldid=1285254" இலிருந்து மீள்விக்கப்பட்டது