பக்கம்:இல்லற நெறி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்ப்பொருத்தம் 3 ί

விரும்புகின்றேன். அவர்களுள் ஒருவர் மூன்றந் தாரமாக ஒரு பெண்ணை மணந்து கொண்டவர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும், அடிக்கடிநேரிட்ட சில்லறைச் சச்சரவுகளின் காரணமாகவும் இரண்டு மனைவி யரை நீதிமன்றம் மூலம் மண-முறிவு செய்துவிட்டார். மூன்ருந் தாரமாக ஒரு பெண்ணை மணந்துகொண்ட பிறகும் குடும்பத்தில் அமைதி இல்லை. குடும்ப வாழ்க்கையில் இன்பமும் இல்லை. புதிய சங்கடங்களும் முரண்பாடுகளும், பிணக்குகளும் தோன்றத் தொடங்கியுள்ளன. அன்னரது வாழ்க்கையைப்பற்றி அறிந்ததிலிருந்து அவரைப் பலமுறை சந்தித்து உரையாடினேன். எங்களிடையே உள்ளந்திறந்து பேச்சு நடந்தது. பலமுறை சந்தித்த பிறகு அந்த மனிதரின் நரம்புநோய் ஆளுமைதான்? இவ்விதப் பொருத்தப்பாடின் மைக்கு" அடிப்படை என்பதை அறிந்தேன். அவர் தன் அன்னையின்மீது கொண்டிருந்த மிகுதியான பற்றுதலே " இதற்குக் காரணம் என்பதும் தெரிய வந்தது. இந்தப் பற்றுதலின் காரணமாகவே அவர் புதிதாக வந்தவளுடன் தேவையான அளவு உறவு வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னொரு தம்பதிகளுள் அந்த ஆடவர் அவருடைய அன்னைக்கு ஒரே பிள்ளை; அவருடைய தந்தை சிறு வயதி லேயே இறந்து விட்டார். அவருடைய அன்னையோ பொருமைக் குணம் படைத்தவள்; தன் மருமகள் நல்ல ஆடையணிகளை அணிந்துகொள்வதைக் கண்டும் பொறுக் காதவள். அந்த ஆடவருக்கு எது நல்லது, எது கெட்டது” என்பதைச் சரியாக அறிந்து சரியான முடிவுக்கு வரும் ஆற்றல் இல்லை. இவர்கள் வாழ்க்கையிலும் இன்பம் இல்லை ஆளுல், இவர் புதிய அலுவல் பெற்று வேற்றுாரில் தன் மனைவியுடன் தன் அன்னையை விட்டுத் தனிமையாக வாழ நேர்ந்ததிலிருந்து அவருடைய வாழ்க்கையில் ஒரு புதிய

23. 5rıbı Gistri gis5anıp-Neurotic Personality: 24. G) L1frGSGLLJrrtg.65rG5)LD—Mai-adjustment: 35. Li jógáē~Attachment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/37&oldid=598355" இலிருந்து மீள்விக்கப்பட்டது