பக்கம்:இல்லற நெறி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கை 379

கள் போன்ற செயல்கள் நடைபெறுதல் வேன்டும். மெய் தொட்டுப் பயிற்றல், பொய் பாராட்டல், புகழ்தல் போன்ற 8 அகத்துறைகளைவிளக்கும் பாடல்களில் விவரிக்கப் பெறும் செயல்களை நுணுகி அறிக. மேற்கூறியவற்றிலிருந்து உடல்பற்றிய தூண்டல்மட்டிலும் போதும் என்பது நம் கருத்தன்று. ஆல்ை, கணவன் மேற்கொள்ளும் மனப் பான்மை, அணுகும் முறை போன்ற பீடிகையே கலவிக்கு மனைவியை ஆயத்தம் செய்கின்றன; அவளும் கணவனை ஏற்ப தற்குத் தன்னைத்தயாராக்கிக் கொள்ளுகின்ருள்: இத்தகைய முதல்நிலைக் காதலுரடாட்டமும் களியாட்டமும் ஒர் உயி ரியல் அடிப்படைத் தேவையாகவே அமைந்து கிடப்பதாகத் தோன்றுகின்றது. ஓரளவு ஆண் பெண்ணை விரும்பி நாடு வதும், காதல் விளையாட்டும் கலவிக்கு முன்னதாக நடை பெறுவதைப் பல்வேறு பிராணிவகைகளிடையேயும் கான லாம். பெண் மயிலுக்கு முன்னர் ஆண் மயில் தோகையை விரித்துக்கொண்டு அடுகின்றது. சேவல் பெட்டைக் கோழி யைச் சுற்றிச் சுற்றி வருகின்றது. ஆனைச் சுற்றி ஆனேறு அலைகின்றது. புணர்ச்சிக்கு முன்னர் நாய்களிடையே இனை பயிலுதலைக் காணலாம், பெண் ஆணை ஏற்று இடங் கொடாதவரை பிராணிகளிடையே கலவி நடைபெறல் முடி பாது. இதல்ை ஆண் பெண் தன்னே ஏற்றுக்கொள்ளும் வரை பலவிதமாகத்தொடர்ந்து சென்று பென்னை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. மேலான உயிர்களிடம் மட்டி லுமே(எ-டு. வாலில்லாக் குரங்குகள், மனிதர்கள்) பெண் னிடம் விருப்பம் இராவிடினும் கலவி நடைபெறுகின்றது. எனவே, முழுமையான பொருத்தப்பாடும் மனநிறைவான பாலுறவு வாழ்க்கையும் ஏற்பட வேண்டுமாயின், புணர்ச்சி

58. மெய் தொட்டுப் பயிறல்-தலைவன் தலைவியின் மெய் யினைத் தீண்டி நெருங்குதல் (வண்டோச்சி மருங்கணதல் போல), பொய் பாராட்டல்-தலைமகன் தலைமகள் மாட்டு உள்ளதும் இல்லதும் கூட்டிக் கொண்டாடுதல். புகழ்தல்தலைவியின் நலத்தைப் பாராட்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/385&oldid=598389" இலிருந்து மீள்விக்கப்பட்டது