பக்கம்:இல்லற நெறி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

இல்லற நெறி


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வரிலெயிறு ஊறிய நீர்88. என்று தன் நயப்புணர்த்தும் வாயிலாக இதழ் அமுதத்தின் இறப்பினைக் குறிப்பிடுகின்ருன். மேற்குறிப்பிட்ட இடங் களைத் தழுவலாலோ முட்டமிடலாலோ தீவிரமான காம இச்சைகளை எழுப்பிவிடுதல் கூடும். இதல்ைதான் தகாத முறையில் காம இச்சையுடன் வந்த சூர்ப்பனகையை இலக் குவன்,

மூக்கும் காதும்வெல் முரண்முலைக் கண்களும் முறையாற் போக்கிப் போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான்.85 என்று எண்ண வேண்டியுள்ளது. தகாத முறையில் சூர்ப்பனகை தன்னிடம் கொண்ட இச்சையை வேருடன் களையும் அறிகுறியாகவே இலக்குவன் இம்முறையை மேற் கொண்டான் போலும் திருமணம் முடிந்த தொடக்கக் காலத்தில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பினைத் தொடுதலைவிட பொதுவாக உடலைத் தொடுவதனாலேயே அதிக பால்துலங் களே வெளியிடுதல் கூடும். இயல்பாகவுள்ள கூச்சமும் நான மும் படிப்படியாகக் களைந்தெறியப்பெற்றவுடன் பிறப்புறுகி புப் பகுதியை நேரடியாகத் தொடுவதால் பால்துண்டல் ஏற்படுகின்றது. பெண் குறியின் பரப்பு முழுவதும் காம இச்சையை எளிதில் எழுப்பவல்லதாகவுள்ளது. பெண் குறி யின் சிறிய உதடுகளில் அல்லது யோனிக் குழலின் வாயிலில் செய்யும் மெதுவான கீறல், குறிப்பாக யோனி லிங்கத்தைத் தொடுதல் எளிதில் துலங்கும் பெண்ணிடம் பெருந்துரண்டலை விளைவிக்கும். இந்த உறுப்புகளிலும் முலைக் கண்களிலும் விறைக்கும் இழையங்கள் நிறைந்துள்ளவை யாதலின், காமக் கிளர்ச்சியின்பொழுது அவை விறைப்பையும் உறுதி யையும் அடைகின்றன. எனினும், இவற்றைத் தொடுவதில் பிரத்தியேகமான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்; இந்தப் பகுதிகளை மென்மையாகவும் நுட்பமாகவும் தொடு தல் வேண்டும். குறிப்பாகப் பெண் குறியில் சிறிது ஈரம்

в4, едзі — 123 65. சூர்ப்பனகைப்-94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/388&oldid=1285262" இலிருந்து மீள்விக்கப்பட்டது