பக்கம்:இல்லற நெறி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 4盏岛

மேலும், மனைவியின் பால் விருப்பமின்மைக்குக் கணவு னின் பால்திறனும்? அவனுடைய பால் நடத்தையும்: காரணமாக அமைதல் கூடும். கணவன் மனைவியை அணுகு வதில் அருவருப்பாக இருந்தாலும், காதலூடாட்டத்தில் அவனிடம் கலையுணர்ச்சி இல்லாவிடினும், அவன் தன்னு டைய மனைவியிடம் பாலுணர்ச்சியைத் துரண்டிக் கிளர்ந் தெழச் செய்வதில் பொருத்தமற்ற முறைகளைக் கையாண் டாலும், அவளிடம் யாதொரு உணர்ச்சியும் தோன்ருமல் பாலுறவிற்குத் துலக் மடையாமலே அவள் காணப்பெறு வாள். மேலும், கணவனுடைய பால்திறனும் போதுமான அளவு இல்லாவிட்டாலும், அவனிடம் பால்விருப்பம் குறை வானதாக இருந்தாலும், அவனிடம் விரைவாக அல்லது காலத்திற்கு முன்னர் விந்து வெளிப் ட்டாலும், அல்லது அவன் இடையீட்டு இணை விழைச்சினை மேற்கொண்டா லும், மனைவியிடம் வெறுப்புணர்ச்சி தோன்றிப் பாலுற வினையே வெறுக்கக்கூடிய நிலை அவளிடம் ஏற்படக் காரண மும் உண்டு. இன்னும் அவளிடம் என்றுமே தூண்டப்பெருத நிலே அமையலாம்; அடிக்கடி அவளிடம் உண்டாகும் மன முறிவுகள் அவளிடம் இன் பவுணர்ச்சியே இல்லாது செய்தல் கூடும். அதனுல் அவள் பாலுறவினைப்பற்றிய விழைவினையே இழத்தற்கும் ஏதுவுண்டு. அடிக்கடி அவள் இன் பவுணர்ச்சி யின் எல்லையை அடையாது, திரிசங்கு சுவர்க்கநிலை”யை எய்த நேரிட்டால், நாளடைவில் தரையிலிருந்து எழுவ தற்கே மறுத்தல் கூடும் என்பதை ஒவ்வொரு கணவனும் நினைவில் இருத்துதல் வேண்டும்!

கழுவாய்: திருமணம் நிறைவேறிய பிறகு கணவன் தன் மனைவியிடம் பால் துலங்கல் இல்லாதிருப்பதைக் காணின், அதற்கு யாதொரு கழுவாயும் இல்லையா என்று வினவியிருந் தாய். கூறுவேன்; ஒரு பெண்ணின் பால்துடிப்பு நீண்ட

28. Limóšpé–Sexual capacity 29. Liri di pi-#93-Sexual behaviour

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/435&oldid=598503" இலிருந்து மீள்விக்கப்பட்டது