பக்கம்:இல்லற நெறி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

இல்லற நெறி


தென்று கருதியே மனக் குழப்பத்துடன் தொல்லைப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது.

பெண்களின் யோனிக் குழலிலும் சில கோளாறுகள் ஏற்படலாம். சிரமமான பிரசவங்களில் யோனிக்குழலின் இழையங்கள் தளர்ந்து விரிந்து விடுவதனால் ஆணுறுப்பு சரி யாக உராய முடியாதுபோய்ப் புணர்ச்சியினல் திருப்தி இல் லாமல் போகின்றது. நவீன பிரசவ முறைகளினல் இத் தளர்ச்சி நிகழாமல் தடுக்கப்பெறுகின்றது; அப்படி நேரிட் டாலும் அறுவைமுறைச் சிகிச்சையினல் சரிசெய்யப்பெறு கின்றது. இத்தகைய நிலைமை நீடித்தாலும் தக்க பொருத்தப் பாட்டினுல் இக்குறையைத் தவிர்க்கலாம். புணர்ச்சியின் பொழுது யோனிக்குழலின் தசைகளை அடிக்கடி இறுகவும் தளரவும் செய்து மனைவி தன்னுடைய பிறப்புறுப்புகள் நன்கு படிவதற்கு வாய்ப்பளித்துத் தன்னுடை உணர்ச்சி யையும் தன் கணவனின் உணர்ச்சியையும் அதிகப்படுத்த லாம்.

முட்டிமைதுனம்: முட்டிமைதுனப் பழக்கமும் ஒருவகை யில் பால் பொருத்தக் கேட்டினை விளைவிக்கின்றது. இப் பழக்கம் உலகிலுள்ள எல்லாச் சமூகங்களிடையேயும் இருந்து வருகின்றதாகப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள னர். ஆண்பாலாரிடம் இப்பழக்கம் அதிகமாக இருப்பதாக வும், பெண்பாலாரிடம் அது மிகக் குறைவாக இருப்பதாக வும் அவர்கள் கூறுகின்றனர். மனிதர்களுடைய பால் நடத்தையையும் பிராணிகளின் பால்நடத்தையும் ஆராய்ந்த ஃபோர்ட் , பீச்” என்ற அறிஞர்கள் பொதுவாகப் பிராணி கள் வாழ்க்கையில் அவற்றின் பிறப்புறுப்புகளில் இப்பழக் கம் தானகத் தூண்டும் முறையில் மிக அதிகமாக அமைந் திருப்பதால் அதனை இயல்பிகந்த செயலாகவோ80 நெறி

77. (ıpılış 60Loğ sırth-Masterbation 78. போர்ச்-Ford

79. 173—Beach 80. Quéisagg—Abnormal

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/468&oldid=1285303" இலிருந்து மீள்விக்கப்பட்டது