பக்கம்:இல்லற நெறி.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8

திருமண வாழ்வில் உடல்நலம்

'சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும்’ என்பது ஆன்ருேர் வாக்கு. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்பது திருமூலரின் திருவாய் மொழி, திருமண வாழ்க்கை நன்ருக அமையவேண்டு மாயின் உடல்நலத்தைத் தம்பதிகள் நன்கு கவனிக்க வேண்டும். பாலுறவு கொள்வதில் உணர்ச்சிகளை ஒரு நெறிப்படுத்தி ஒழுகவேண்டும். வழி விலகிச் சென்று பல இன்னல்களே தருவித்துக் கொள்ளக் கூடாது. திருமணத் திற்குரிய வயது கணவன் மனைவியருக்கிடையே இருக்க வேண்டிய வயது வேற்றுமை, மணமக்கள் முதல் கரு பத்தைத் திட்டமிடல், ககத்தடை முறைகளைத் தேர்ந் தெடுத்தல், இணை விழைச்சினைக் கட்டுப்படுத்தி ஆளுதல், தம்பதிகளிடையேயுள்ள பால் வேட்கை வேற்றுமையைச் சமாளித்தல், மாதவிடாய் கருப்பகாலம் சூதக ஒய்வு காலங் களில் உறவு கொள்வது பற்றிய குறிப்புகள், சிலரது எல்லே மீறிய செயல்கள், பால் அடக்கத்தின் விளைவுகள், திருமணத்திற்கு முன்னர் உறவுகள், குறிக்கோள் திருமணம் போன்ற பல செய்திகளும் அவற்றுடன் தொடர் புள்ள பிறவும் இப்பகுதியிலுள்ள கான்கு கடிதங்களில் (40-43) ஆராயப்பெறுகின்றன;

1. திருமந்திரம்-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/473&oldid=598587" இலிருந்து மீள்விக்கப்பட்டது