பக்கம்:இல்லற நெறி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இல்லற நெறி


குழவிகளும் நோயுற்றிருக்க வேண்டும் என்ற நியதி இல்லை: இதிலிருந்து ஒரு தம்பதிகட்குப் பிறக்கும் குழவிகளின்உடல் நலத்தை முன்னரே அறுதியிடுவதற்கு ஏதாவது வழி உள்ளதா என்ற ஐயம் எழலாம். இஃது இனமேம்பாட்டி யலைப்பற்றிய பிரச்சினையாகும். இதனைச் சிறிது விளக்கு வேன். இயல்பாகத் திருமணம் புரிந்துகொள்ளும் ஆணும் பெண்ணும் தமக்குப் பிறக்கும் குழவிகள் உடல் வன்மை யிலும் உளவளத்திலும் நன்முறையில் இருக்கும் என்றே எதிர்பார்ப்பர். பெற்றேர் உடல்நலத்துடனும் பிறருக்குக் கடத்தக்கூடிய யாதொரு நோயும் இல்லாது இருந்தால், மரபுவழியாக இறங்கிவரும் இயல்பிகந்த பண்புகள் அவர்கள் குடும்ப வரலாற்றில் இல்லாதிருக்குமானல், அவர்கட்குப் பிறக்கும் குழவிகளும் சாதாரணமாகவே இருப்பர் என்று கருதுவது பொருத்தமே. அதிலும் உடற் பண்புகளையும் உளப்பண்புகளையும் அறுதியிட்டு முன்னரே தெரிவிக்கக் கூடிய சோதனைகள் கண்டறியப் பெரு திருக்கும்பொழுது இவ்வாறு எண்ணுவது மிகவும் பொருத்தமாகும். ஆயினும், தம்பதிகளுள் யாராவது ஒருவர் உடலிலோ உள்ளத்திலோ தம் சந்ததியினருக்குக் கடத்தக்கூடிய நோயால் பீடிக்கப் பெற்றிருந்தாலும், அல்லது மரபுவழியாக இறங்கக்கூடிய மாசு ஒன்று குடும்பவரலாற்றில் காணப்பட்டாலும், அது பற்றிய எல்லா விளைவுகளையும் யோசிக்கத்தான் வேண்டும்: திருமணத்திற்கு முன்னர் அதுபற்றிய தகுதியான மருத்துவ அறிவுரையையும் நாடவேண்டும். மரபுவழியாக இறங்கக் கூடிய இயல்பிகந்த பண்புகளைப் பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதனை அடுத்த கடிதத்தில் ஒரளவு விரிவாக விளக்குவேன்;

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

44. இனமேம்பாட்டியல்-Eugenics,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/48&oldid=1285099" இலிருந்து மீள்விக்கப்பட்டது