பக்கம்:இல்லற நெறி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

இல்லற நெறி


திருப்தியான உறவிற்குப் பெருந்தடையாகக்கருதுகின்றனர். இங்கு மனைவி தக்க முறையினத் தேர்ந்தெடுத்துத் திருப்தி யான இணைவிழைச்சு ஏற்படுவதற்கு வகை செய்து கொள் வால் வேண்டும்.

இன்று குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகங்களில் அங்கீ கரிக்கப்.ெ ற்ற முறைகளை கையாளுவ தல்ை யாதொரு திங்கும் இல்லை என்பதைத் தம்பதிகள் உணர்தல் வேண்டும். பெரும்பான்மையான மருத்துவநிபுணர்களால் தேர்ந்தெடுக் கப்பெற்ற முறைகளாதலின், அவற்றைத் தம்பதிகள் யாதொரு ஐயுறவுமின்றி மேற்கொள்ளலாம். கருப்பையில் கருவிகளைச் செருகிக் கொள்ளுதல், இடையீட்டு இணை விழைச்சினைத் தொடர்ந்து விடாதுமேற்கொள்ளல், டுஷ்' செய்து கொள்வதில் தீவிரமான வேதியியற் பொருள்களைப் பயன்படுத்தல்-போன்ற முறைகளைக் கையாளுவதால் உறுப்புகளில் நெருக்கம் அல்லது வீக்கம் ஏற்பட்டுத் தொல்லைகள் நேரிடலாம். ஆல்ை, அங்கீகாரம்பெற்ற முறை களில் இத்தகைய குறைபாடுகள் யாதொன்றும் இல்லையென் பது அறியத்தக்கது. மேலும், அதிக நாட்கள் கருத்தடை முறைகளைக் கையாளுவதாலும் பெண்ணிடம் மலட்டுத் தன்மை போன்ற குறைகளும் நேரிடுவதில்லை என்பதையும் நினைவிலிருத்துவாயாக. இவ்வாறு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திலுள்ள ஆயிரம் பெண்கள் இம்முறைகளைக் கைவிட் டதும் பெரும்பான்மையோர் ஆறு மாதத்திற்குள் கருவுற்ற னர் என்றும் இவர்களிலும் பெரும்பான்மையோர் முதல் இரண்டு மாதங்களுக்குள் சூல் கொண்டனர் என்று சோதனைகள் மூலம் கண்டுள்ளனர். எனவே, கருத்தடை முறைகளை மேற்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற அச்சமே கொள்ளத் தேவையில்லை.

யோனிக்குழல் கசிவுகள்: இவ்விடத்தில் இன்னொரு செய் தியையும் தெரிவித்து இக்கடிதத்தை முடிக்க எண்ணுகின் றேன். சாதாரணமாகப் பெண்களின் யோனிக்குழலில் சிறிதளவு கசிவு இருந்துகொண்டேயிருக்கும். இதில் ஒரு 6. மலட்டுத்தன்மை-Sterility - ----

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/482&oldid=1285310" இலிருந்து மீள்விக்கப்பட்டது