பக்கம்:இல்லற நெறி.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம்: ፬03

முறிவினை உண்டாகுவதுடன் சமூகத்தில் அவர்கட்கு இடம் இல்லாமலும் செய்கின்றன. சில சமயம் ஒழுக்கத்தை நாடும் பெண்களிடமும் தம்முடைய பால்துடிப்புகளைத் திருப்தி செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக வன்மை யாகத் தோன்றி அவர்களால் கட்டுப்படுத்த முடியாத அள வுக்கு வளர்ந்து விடுகின்றது. இப்பருவத்திலுள்ள சில பெண்கள் ஒரே ஒரு மனவெழுச்சிமிக்க காமக்களியாட்டத் தைப் பெறுவான் வேண்டிப் பணம், காதல், நட்பு முதலிய வற்றையெல்லாம் பறிகொடுத்து அனைத்தையும் துறக்கின்ற னர்; அல்லது மறக்கின்றனர். இத்தகைய பெண்கள் பெரும் பாலும் இளைஞர்களையே-சில சமயம் சிறுவர்களையும்-கூட் டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தம்முடைய இன்ப வாழ்க்கையின் ஈமச் சட்ங்கு’ போன்ற நாடகத்தை நடித்து முடிகின்றனர்: இன்றைய வாழ்க்கையில் நாம் பல எடுத் துக்காட்டுக்களின்மேல் இடறித்தான் விழவேண்டும் வய தாகிக் கிழப்பருவத்தை நோக்கிச் செல்லும்பெண் மறைந்து போகும் தன் இளமையை நம்பிக்கையின்றிப் பற்றிக் கொண்டு பருவம்முதிராத பாலகனைக்காததனுகக் கொண்டு நடத்தும் வாழ்க்கையின் இறுதி நாடகம் பல புதின ஆசிரி யர்கட்குக் கதைப் பொருளாக இருந்து வருகின்றது.

மன நிறைவு பெற்ற கற்புடை மகளிர்: மேலே கூறியவை அனைத்தும் இயல்பாகவே எல்லாப் பெண்களிடமும் தோன் றும் செயல்கள் என்று கருதுதல் வேண்டா. பல குழந்தை கட்குத் தாயாகி குடும்பப்பாரத்தைத்தாங்குவதுடன் அவர் களின் பாதுகாப்பிலும் கல்வியிலும் ஈடுபட்டுக் கவலைகொள் ளும்பெண்களும், அல்லது சமூக அலுவல்களிலும் பிறபணி களிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பெண்களும் இவ்வழி களில் எளிதாகத் திரும்புவதில்லை. பெரும்பாலும் குழந்தை களின்றியிருக்கும் காமம் மீதுார்ந்து நிற்கும் பெண்களும், யாதொரு திட்டமான வேலையுமின்றி சதா களியாட்டம், கேளிக்கை சொகுசான வாழ்க்கை, காலவன்னம்: ' சதா

-- 54. Erspausiorsow (b-Fashion

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/509&oldid=598668" இலிருந்து மீள்விக்கப்பட்டது