பக்கம்:இல்லற நெறி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 45

கின்றது. இந்த ஒற்றையணு தாயின் சூற்பையிலுள்ள: ஒரு முட்டையும், தந்தையின் விரையினின்று வெளிப் போந்த ஒரு விந்தணுவும் சேர்ந்த தல்ை உண் டானது. இதுபற்றிய கருத்துக்களை இனப்பெருக்கத்தைப் பற்றிக் கூறும்போது விரிவாக விளக்குவேன். இந்த முட்டை விந்தணு என்ற இரண்டு மிகச் சிறிய உயிரணுக்களில் கோல் போன்ற பொருள்கள் அடங்கியுள்ளன. இந்தக் கோல் போன்ற பொருள்கள் யாவை? உட்கருக்' எனப்படும் உயிரணுவின்உட்பாகத்தில் குரோமேட்டின் என்ற தனிப் பொருள் உள்ளது; இதில் பாதி தாயின் முட்டையணுவி விருந்தும், பாதி தந்தையின் விந்தணுவிலிருந்தும் வந்தவை. ஓர்உயிரணு இரண்டாகப்பிளவுறும்போது இப்பொருள்களே கோல்கள்போல் மாறுகின்றன: உயிரணு தனியாகப் பிரிந்த தும் பாதியாகப் பிளந்துகொண்ட நிறக்கோல்கள் விரை வில் தங்களுடைய பழைய உருவத்தை அடைந்து விடுகின்

றன. இச்செயல் படத்தில் (படம்-1) விளக்கப்பெற்றிருப்ப தைக் காண்க. இஃது ஆறுநிலைகளில் காட்டப்பெற்றுள்ளது: இந்த நிறக்கோல்களுள் சில நீளமாகவும், சில குட்டை யாகவும், சில நேராகவும், சில வளைந்தும் இருக்கும். ஆனால்,

48. SfðsDLI—Ovary. 49. o.l. æG-Nucleus 50. GGyrn Guolių sir-Chromatin 51. opéââtró–Chiomosome.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/51&oldid=598670" இலிருந்து மீள்விக்கப்பட்டது