பக்கம்:இல்லற நெறி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

இல்லற நெறி


மேற்குறிப்பிட்ட சுதந்திரம் ஆடவர் உலகுக்கு நன்றுக அமைந்து விட்டது என்ருலும் பெண்டிர் உலகிற்குச் சிறிதும் பொருத்தமற்றதாகவே உள்ளது. இஃது இறைவன் படைப் பில் ஏற்பட்ட ஒரு நன்மை என்றே கொள்ளவேண்டும். பெரும்பாலும் ஆடவர்கள் பால் செயலில் நெறி தவறிப் போகலாம்; அதற்கு அவர்கட்குச் சுதந்திரம் உள்ளது. சமூகம் அந்த நெறியை அவ்வளவாகக் கடிவதில்லை; பொருட்படுத்துவது மில்லை. மகளிரிடையே திருமணத்திற்கு முன்னர் பாலுறவு கொள்வதை சமூகம் அங்கீகரிப்பதில்லை. மேட்ைடிலும் இந்த நிலைதான். சமூகத்தில் பெரு பாலோர் பெண்ணின் கற்பினைத் திருமணத்தின் ஒரு முக்கிய கூருகக் கொள்ளுகின்றனர்; கன்னிசழியாதிருப்பது ஒரு மணப் பெண்ணின் இன்றியமையாத பண்பாகவே கருதப்பெறு கின்றது. திருமணத்திற்கு முன்னர் வேறு காரணத்தால் கருவுயிர்த்த மச்சகந்தியும் குந்தியும்" மீண்டும் சமூகம் அறியாவண்ண்ம் கன்னிப்பெண்களாகவே மாற்றப்பெற்ற மையும் இந்தப் பண்பின் அடிப்படையில்தான் என்பது உணரத்தக்கது. அரசியல், பொருளாதார, பண்பாட்டு முறைகளில் பெண்களின் கற்பு பெரிய அளவுகளில் தளர்ந்து விட்ட போதிலும் திருமணத்திற்கு முன்னர் ஒரு பெண் பாலுறவில் இறங்கத் துணிவளேயாயின், அவள் தன் கற்பினைப் பணயம் வைக்கின்ருள் என்றே கொள்ளல் வேண் டும்; அத்தகையவள் சமூகத்தின் மதிப்பினைப் பெறுவாள் என்றும் சொல்லுவதற்கில்லை. மேலும் விரும்பத்தகாத கருப்பம் கூட இதல்ை நேரிடவும் இடமுண்டு. கருத்தடை முறைகளை மேற்கொள்வதில் கவனக்குறைவாலோ, அல்லது அப முறைகளிலுள்ள குறைகளினலோ கருப்பம் ஏற்பட்டு 66. மச்சகந்தி-மீனவனின் மகள்; பராசரரால் கருவுற்று வேதவியாசரைப் பெற்றெடுத்தவள். பராசரரின் தவமகிமையால் மீண்டும் கன்னியானவள். 67. குந்தி-பாண்டவரின் தாய்: திருமணத்திற்கு முன்னர் கதிரவன் அருளால் கர்ணனை ஈன்று மீண்டும் அவன் துணையாலேயே கன்னிமையை அடைத்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/516&oldid=1285327" இலிருந்து மீள்விக்கப்பட்டது