பக்கம்:இல்லற நெறி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

இல்லற நெறி


முயல்வர். அது கண்ட அப் பெண்கள் தம் தோழியர் மூலம் உண்மையைப் புலப்படுத்துவர். பெற்ருேரும் உண்மையை அறிந்து அவள் காதல் கொண்ட மகனுக்கே மணம் புரிவிப் பர். அச்சமும் அவாவும் மிகுந்தால் ஊணுறக்கமின் ம, உடல்நலிவு, தூக்கத்தில் உளறல் போன்ற நிலைகள் ஏற்படும் என்று கூறுவர் உளவியலார். பருவப் பெண்கள் இன்று பேய் பிடித்ததென்றும், தெய்வக்குறை யென்றும் உண்ணு மல் உறங்காமல் உளறிக்கொண்டு படுத்த படுக்கையாய்க் கிடக்கும் நிலையைப்போன்றதே இந்நிலையாகும். காமநோயே இவை யனைத்திற்கும் காரணமாகும் என்பது அறியத்தக்கது. திருமணம் உரிய முறையில் உரியவருக்கே நடைபெற்றுவிட் டால் அனைத்தும் கதிரவனைக் கண்ட பனிடோல் நீங்கிவிடும். இங்ங்ணம் உலகவழக்கில் செயல்கள் நடைபெற்று வந்ததாக இலக்கியக் குறிப்புக்களைகொண்டு ஒருவாறு ஊகிக்கலாம். இதுவே இலக்கண நூலார் குறிக்கும் உலக வழக்கு ஆகும்.

நாடக வழக்கு: இலக்கியம் வாழ்க்கையினின்றும் மலர் கின்றது என்றும், அது வாழ்க்கைக்கே உரியது என்றும், அது வாழ்க்கைக்காகவே நிலைபெற்று நிற்கின்றது என்றும் இன்றை மேனுட்டுத் திறய்ைவாளர்கள் கூறுவர். இக் கருத்தி னயொட்டியே மேற்கூறியவாறு நடைபெற்ற உலக வழக்கம் நாளடைவில் புலவர்களால் சிறப்பித்துப் பாடப் பெறும் நிலையை அடையலாயிற்று, சிறந்த புலவன் வாழ்க் கையிலிருந்து எடுத்த செய்திகளை அப்படியே தன் இலக்கியத் தில் படைப்பதில்லை. அவற்றை மாற்றியும் ஒரு நெறியில் அமைத்தும் தாழ்ந்தவற்றை உயர்ந்தவையாக மாற்றியும் தன் கற்பனைத் திறத்தால் ஒரு குறிக்கோள் நிலையினைத் தன் இலக்கியத்தில் படைப்பான். இதனைப் படிக்கும் சமூகம் தன்னிலையினின்றும் மேலும் உயரும். இத்தகைய செயலையே பண்டைத் தமிழ்ப் புலவர்கள் செய்தனர். இதனையே இலக் கண நூலார் நாடக வழக்கு என்று வழங்குவர். இதனைச்

4. Hudson, W. H. An introduction to the Study

of Literature, page 92,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/530&oldid=1285334" இலிருந்து மீள்விக்கப்பட்டது