பக்கம்:இல்லற நெறி.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 555

திருமணத்திற்குமுன் தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றேன். ஒரு திருமண்த்தின் தன்மை உடற் கூறு, மனப்பான்மை ஆகிய இரண்டு கூறுகளைப் பொறுத்த தாகும். ஆகவே வையத்தில் உடல் நலத்துடன் வாழ் வாங்கு வாழ்வதற்கு ஒவ்வொருவரும் மானிட உடலைப்பற்றி யும் மானிட உள்ளக்கிளர்ச்சிகளைப் பற்றியும்?? நன்கு அறிந் திருக்க வேண்டியது மிகவும் இன்றிய்மையாதது. ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு பாலின் அமைப்பு, பாலின் செயல்கள் இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பு, அவற்றின் செயல் கள் ஆகியவைபற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளுகின் ருரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் திருமணத்தில் நல்ல உடற்பொருத்தப்பாடுகளை அமைத்துக்கொள்ள முடியும். அங்ங்ணமே, அவர் திருமணத்தைப் பற்றியும் குடும்ப வாழ்க் கையைப்பற்றியும் தம்முடைய மனப்பான்மைகளையும் தமக்கு வாழ்க்கைத்துணையாக வருவோரின் மனப்பான்மை களேயும் அறிந்துகொள்வதுடன் பொதுவாக மானிட நடத் தையை ஊக்குவிக்கும் கூறுகளையும், தமது சிந்தனை உணர்ச்சி ஆகியவற்றில் பங்குபெறும் கூறுகளையும்பற்றிய தெளிவான அறிவும் பெற்ருல், அவர் தமது குடும்பத்தில் மிக நல்ல முறையில் உள்ளக்கிளர்ச்சிபற்றிய பொருத்தப் பாடு அடைவதற்குத் துணையாக இருக்கும். சுருங்கக்கூறின், ஒவ்வொருவருக்கும் உடலியல், உளவியல்பற்றிய அடிப் படை அறிவு மிகவும் இன்றியமையாதது.

கல்வியைப்போலவே திருமண ஆயத்தமும் தொடர்ந்து நிகழவேண்டிய செயலாகும், அஃது அன்ாட வாழ்வின் ஒரு பகுதியுமாகும். திருமணத்தைப்பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் நம்முடைய மனப்பான்மைகள் தம்முடைய வாழ்க் கையின் தொடக்கத்திலேயே அமைவதால், உண்மையில் திருமணத்தைப்பற்றியகல்வி பிள்ளைப்பருவத்தில் பெற்ருேர் இல்லத்திலேயே தொடங்கி முதிர்ச்சி யடையும்வரை தொடர்ந்து நிகழ்கின்றது. வாழ்க்கையில்பெளதிகஉண்மை

3 , உள்ளக்கிளர்ச்சி-Emotion

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/561&oldid=598784" இலிருந்து மீள்விக்கப்பட்டது