பக்கம்:இல்லற நெறி.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

இல்லற நெறி


பொருத்தமான மற்ருெரு பாதியைத் தேடிப் பிடிப்பதில் பெரும் பொறுப்பு வேண்டும்; அரிதில் முயன்று பெறவேண் டிய தொன்று இது. இரு பாதியும் அன்பினல் பிணைக்கப் பெறல் வேண்டும். இதுவே சிறந்த திருமணத்திற்கு உயிர் நாடியாகும். உள்ளப் பொருத்தமே உடற் பொருத்தத் திற்கு இன்றியமையாது வேண்டப்பெறுவது:

பருகிய நோக்கெனும் பாசதி தாற்பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிகின அண்ணலும் வாட் கண் நங்கையும் இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினர். என்ற பாடலை நோக்குக. இது மிதிலைச் செல்வியும் அயோத்தி அண்ணலும் இணைந்தகைக் காட்டுவது. இவர் கன்பால் நிலவிய அன்பு இளந் தம்பதிகட்கு எடுத்துக்காம் டாக இருத்தல் வேண்டும்.

இளந் தம்பதிகளிடையே ஒழுங்குபட்ட இல்லறம் நாள டைவில் வீடு பேற்றை அளிக்கும். வீடு என்பது தனித்து ஒர்எல்லைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கும் ஒரிடம் அன்று என் பதை வள்ளுவர் கோட்பாட்டால் அறியப்பெறும் ஒர் உன்மை, வள்ளுவர் முப்பால் கூறிஞரேயன்றி நாற்பால் கறிஞரில்லை. வீடு என்னும் தமிழ்ச் சொல் வினையினடி யாகப் பிறந்த தொழிற் பெயர். கட்டு அல்லது தளை விட்ட இடம் வீடு; அதாவது கட்டினின்றும் விடுதலை அடைவது வீடாகும் ஒருவனும் ஒருத்தியும் அன்பால் விழுங்கப் பெற்றுக் கட்டு நீங்கி இன்ப வாழ்வு நடத்தும் இடமே வீடாகும். சுருகிகக் கூறின் துன்ப நீக்கமும் இன்ப ஆக்க மும் உற்ற இடமெல்லாம் வீடேயாகும். இவ்வுலகில் துன்ப மின்றி இன்பம் நிலவும் இடம் பெற்ற வீடு' என்னும் வழக்கு முழுத் துன்ப நீக்கமும் முழு இன்ப ஆக்கமும் உற்ற நிலையாகிய வீடு என்னும் முதன்மையினின்றும் பிறந்தது என்பர் அறிஞர் எனவே, வீடு என்பது அன்பிலும் அறத்தி லும் இன்பத்திலும் நிலவும் ஒரு நிலையாகும்.

4. கம்பராமா-மிதிலைக்காட்சி-செய், 7,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/580&oldid=1285359" இலிருந்து மீள்விக்கப்பட்டது