பக்கம்:இல்லற நெறி.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல் வாழ்த்து ύ γγ

என்று நீதிவெண்பா பெண்ணின் இயல்பை எடுத்துப் பேசு

கின்றது. இன்னும்,

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் சேயோடு தான் பெற்ற செல்வம்போம்-தூயவுடன் வந்தேன் மரிக்கில் வலிபோம் மனயெனிலோ அந்தோ இவையெலாம் போம்,'

என்ற நீதிசாரத்தையும் காண்க. இவ்வான்ருேர் மொழி களின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து வாழ்தல் வாழ்வை உணர்ந்து வாழ்தலாகும். வாழ்வை அறிவால் ஒழுங்கு படுத்தி நிறுத்துதல் அறிவுடைமைக்கு அழகு. பெண்ணின் பாலுள்ள தெய்வ இன்பத்தை நுகர்ந்த நம்பியாரூரர்,

பண்டிய்த்த மொழிப்பரவை சங்கிவிக்கும் எனக்கும் பற்ருய பெருமானே, மற்ருரை யுடையேன்.:

என்று தனக்கும் தன் துணைவிமார்க்கும் ஏற்பட்ட பற்று கடவுள் பற்று என்பதை அறிக.

உனக்கு உன் பெற்ருேர் தேர்ந்தெடுத்த பெண் உன் மனத்திற் குகந்தவள் என்பதை அறிந்தேன்; மகிழ்ந்தேன். இஃது ஊழ்வலியால் நேரிட்டது என்பதை எண்ணி மகிழ்க. நீயும் நின் வாழ்க்கைத் துணைவியும் இந்த ஐம்பது கடிதங் களையும் படித்து அக்கருத்துகளை நன்கு உளங்கொள்வீர் களாக, கில அறிவியல் உண்மைகள் உன் துணைவிக்குப் புரிய வில்லையாயின் நீ அவற்றை அவளுக்கு விளக்குவாயாக. வாழ்க்கை நடத்தும்போதுதான் பல உண்மைகள் உனக்கும் விளக்கம் எய்தும்; இயற்கை நுட்பங்கள் யாவும் இனிது புல கைத்தொடங்கும். பெண்ணும் ஒர் இயற்கை வனம்போலக் இாட்சியளிப்பாள்; நீல வானமும் வெண் திங்களும், மாங் குயிலும், நீல மஞ்ஞையும், அழகிய மலரும், விரைக் கொடி யும், அருவிகொழிக்கும் மணிகளும், பிறவும் ஒருங்கு திரண்டு பெண்ணெனப் பொலிதலை நீ காண்பாய். அப்பொழுது

12. நீதிசாரம். 18. தேவாரம்-அடங்கன் முறை-7701

இ-57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/583&oldid=598832" இலிருந்து மீள்விக்கப்பட்டது