பக்கம்:இல்லற நெறி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 57

5

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

சூழ்நிலை: சென்ற கடிதத்தின் இறுதியில் சூழ்நிலை என் பதைக் குறிப்பிட்டேன். சூழ்நிலை என்பது உளவியலில்வரும் கலைச்சொல்: பள்ளியிலும் வெளியிலும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் அநுபவங்களே சூழ்நிலை என்பது; ஆசிரியர், பெற்றேர், மற்ருேர் அளிக்கும் ஊக்கம், குழந்தைக்குக் கிடைக்கும் வெற்றி தோல்விகள் ஆகியவை அனைத்தும் அடங்கிய நிலையே அது மனப்பண்புகளும் மீப்பண்பு களும் மரபுவழியாக இறங்குகின்றன என்பதுபற்றி கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. தொடக்கக் காலத்தி லிருந்த இனமேம்பாட்டியல் அறிஞர்கள் ஒரு குழந்தை யின் அறிதிறனும் ஆளுமையும் மரபுவழியால் அறுதியிடப் பெறுகின்றன என்று வற்புறுத்தினர். பின்னர் நடத்தைக் கொள்கையினர் சூழ்நிலையே-கல்வி. பயிற்சி, தொடக்க கால அநுபவங்கள், ஆக்க நிலையுறுத்தல்" முதலியவை அடங்கிய நிலை-குழந்தையை ஆக்குவதற்கும் அது துலக்க மடைவதற்கும் முழுதும் பொறுப்பாகின்றன என்று வற் புறுத்தினர். இன்று உளவியலறிஞர்கள் மரபுவழிக்கூறு களும் சூழ்நிலைக் கூறுகளும் பிரித்து அறியப்பெருதவை

64。 15tlicial 1–Temperamental quality. 65. இனமேம்பாட்டியலAMGř–Eugenist. 66, gopér—Intelligence:

67. நடத்ை 530.5m dirgogularif—Behaviourist. 68. ஆக்க filosou, pišgé)–Conditioning: 69. துலக் gih–Dovelopment:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/63&oldid=598874" இலிருந்து மீள்விக்கப்பட்டது