பக்கம்:இளந்தமிழா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11 இயல்பான அழகிலே உள்ளத்தைப் பறிகொடுக்கிறார் காதற் கவிஞர். அவளுடைய பச்சைச்சேலை இயற்கையான எழிலோடு சரிந்தாடுகிறது :

 "பாச்சான் கொடி இலைபோல்
    பசுமைகொண்ட.கல்லாடைக் 
  கற்றைக் கொசுவமது 
    கலைந்தே சரிந்தாட, 
  ஒற்றைவடச் செம்பவளம்
    உவந்தேறி ஆடிவரும்”
 இந்தக் காட்சியைக் கண்டு மையல் கொள்ளுகிறார் கவிஞர். அவள் போகுமிடமெல்லாம் போய் அவள் அழகைப் பாடுகிறார்.
  "எட்டிக்களை பறிக்கும்
     இடமெல்லாம் நிற்கேனோ?”

என்று ஏங்குகிறார். கைத்தடியால் கட்டிமண்ணே உடைக்கிறாள் அவள். அந்தக் கைத்தடியாக நான் மாறி விட்டால், அவள் என்னைத் தொடும் பேறு கிடைக்குமல்லவா!' என்று மருகுகிறார்.

   "கட்டிமண்ணே நீ உடைக்கக்
      கைத்தடியாய் ஆகேனோ?"

என்று கவிஞர் அலமரும்போது, காதல் வெறி உச்சநிலையை அடைந்து விடுகிறது.உத்தமக் கவிஞனுக்கு இன்றியமையாதது எல்லையற்ற பரிவுதான்; தன் எண்சாண் உடம்பைவிட்டு வெளிவந்து மற்றவர்களுடைய உடலுக்குள்ளும் உள்ளத்திற்குள்ளும் புகுந்து, அவர்களோடு இரண்டும் ஒன்றுமறக்கலந்து: உலகத்தை அவர்களுடைய கண்கள் வாயிலாகப் பார்க்கத் தெரியவேண்டும். 'குழந்தை விளையாட்டு" என்ற பாடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/13&oldid=1358822" இலிருந்து மீள்விக்கப்பட்டது