பக்கம்:இளந்தமிழா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
அவர்கள் முதற் பதிப்பிற்கு அளித்த

முகவுரை

மறுமலர்ச்சி பெற்றுவரும் தமிழ் மொழிக்குப் பாட்டாலும் உரையாலும் பணி செய்யும் எழுத்தாளர் இந் நாளிற் பலராவர். அன்னவருள் முன்னணியில் உள்ளவர் திரு. பெரியசாமித் தூரன். உள்ளத் துடிப்பும், உயரிய ஆர்வமும் உடைய தூரனார் பாடிய தமிழ்ப் பாடல்கள் ‘இளந்தமிழா’ என்னும் விளிப்பெயரால் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

பலதிறப்பட்ட பாடல்களை உடையது இந்நூல். வீரப் பாட்டும், விடுதலைப் பாட்டும், காதற் பாட்டும், கதைப் பாட்டும், குழந்தைப் பாட்டும், குயிற் பாட்டும் இன்னோரன்ன பிறவும் இந்நூலில் அமைந்து இன்பம் தருகின்றன. இன்னும் இக்கவிதையிலே காவிரியாற்றைக் காணலாம்; கார்த்திகைப் பிறையையும் காணலாம் என்றால் மேலும் சொல்ல வேண்டுமா?

புலவர் பாடும் புகழுடைய காவிரியாற்றின் கரையிலே நின்று,

“நந்தா எழில் அரசீ!
நாணமுடன் உடல் வளைத்துச்
சிந்த முறுவலுடன்
செல்கின்றாய் காவிரியே”

என்று கவிஞர் பாடும்பொழுது சிலம்பும், மேகலையும் எழுதிக் காட்டுகின்ற காவிரியின் சித்திரம் நம் மனக் கண்ணெதிரே மிளிர்கின்றது.

இக்கவிஞர் பாடும் பிள்ளைப் பாட்டிலே நமது உள்ளங் கவரும் உயரிய சுவை அமைந்திருக்கின்றது. மாசற்ற மனமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/5&oldid=1314355" இலிருந்து மீள்விக்கப்பட்டது