பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 இளமையின் நினைவுகள் இருந்தேன். தமிழ்ப்பாட புத்தகத்தை எடுத்து, அந்த 'ஒருத்தி நான்' என்ற பாடலைப் பதம் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். படுத் திருந்த அ ன் னை யார் எழுந்து வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். ஆமாம்! இங்கு ஒன்று சொல்லவேண்டும். என் அன்னையார் தமிழை நன்கு எழுதப் படிக்கக் கற்றவர்கள். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் எல்லாம் என் பாடல்களை முறையாகப் பயில ஆசானக இருந்து எனக்கு உதவிய வர்கள். சாதாரணப் பாடல்களையெல்லாம் பதம் பிரித்து உரை காணும் அறிவு பெற்றவர்கள். ஆகவே அவர்களுக்கு நான் படித்த பாட்டு நன்கு புரிந்துவிட்டது என்னலாம். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்ட அன்னை யார் அந்தப் பாட்டை மறுமுறை படிக்கச் சொன்னர்கள். நான் நன்ருக நிறுத்திப் பதம் பிரித்துப் படித்தேன். அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடித்துத் தலை நிமிர்ந்தேன். அவர்கள் கண்கள் குளமாகி இருந்தன. அவர்கள் அழுதுகொண்டே இருந்தார்கள். நான் அம்மா' என்றே அலறி விட்டேன். வீட்டில் வேறு யாரும் இல்லை. பாட்டி கோயிலுக்குப் போயிருந்தார்கள். அம்மா அழும் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஏன் அம்மா?’ என்று கேட்கத்தான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் அழுகை நிற்க வில்லை. மென்மேலும் அழுதுகொண்டிருந்தார்கள். எனக்குக் காரணம் தெரியவில்லை. பாட்டைக் கேட்டு அம்மா அழுவா னேன்? குழந்தை போலானேன். எனது ேக ள் வி க் கு அவர்கள் பதில் கூருது மேலும் மேலும் அழுதுகொண்டே இருந்தது என்னையும் அழிவைத்தது. நானும் அழுதேன். விம்மி விம்மி அழுதேன். பதினைந்து வயதுக்கு மேலான குமரப் பருவமடைந்த பத்தாம் வகுப்பு பயிலும் ஒருவனுகவே நான் இல்லை. அழ அழ அம்மா அ ழு கை ஓய்ந்தர்ர்கள்.