பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இளமையின் நினைவுகள் ஆற்றுக்குச் சென்று குளிப்பார்கள். அப்படிக் குளிக்கும் போது ஒருநாள் அந்த மூக்குத்தி ஆற்று நீரில் கழன்று வீழ்ந்துவிட்டதாம். எங்கள் ஆறு பாலாறு. அதில் எப் போதோ ஒருமுறை வெள்ளம் வரும், ம ற் ற க் காலங்களி லெல்லாம் ஊற்றுப் பெருக்கால்தான் நாங்கள் உய்ந்து வந் தோம். அன்னை ஒளவையின் வாக்கு பிற ஆறுகள்வழி மெய்யோ அன்றிப் பொய்யோ என்ருலும்கூட எங்கள் பாலாறு அவர் வாக்கை மெய்யாகவே ஆக்கிவந்தது. ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவவாறு ஊற்றுப் பெருக்கால் உலகுளைட்டும்' என்ற ஒளவை வாக்கை நாங்கள் மறக்காமல்செய்து வந்தது பாலாறு. அந்த வரண்ட ஆற்றுச் சிறு ஊற்றுப் பள்ளத்திலே மூழ்கி வந்த என் அன்னையாருடைய மூக்குத்தி கழன்று மேல் பாகம் தண்ணிரில் வீழ்ந்துவிட்டது. வீட்டுக்கு வந்த தும் அடிப்பாகம் மட்டும் கீழே விழுந்ததாம். மேல்கல் வைத் துச் செய்த அந்த மூக்குத்தி காணவில்லையாம். உடனே அவர்கள் இரண்டொருவருடன் ஆற்றுக்குச் சென்று குளித்த இடத்தில் தேடினர்களாம். சிலமணி நேரம் துரு வித் துருவித் தேடியும் கிடைக்கவில்லையாம். சரி போகட் டும், நம்முடையதாக இருந்தால் என்ருவது கிடைக்கும்’ என்று விட்டு வந்துவிட்டார்களாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. என் அன்னைக்கும் அது இன்று தேவை இல்லை. கணவனுர் மறைந்தபின் அதனுல் பலன் என்ன? நிற்க இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் இரண்டுமூன்று பெருவெள்ளங் கள் ஆற்றில் வந்தன. மேடு பள்ளமாயிற்று. பள்ளம் மேடா யிற்று. வாய்க்கால் தூர்ந்தது. புது வாய்க்கால் வெட்டி